Header Ads



யாழ் சோனகதெருவின் போக்குவரத்துகள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.


(ஜான்ஸின்)

யாழ்ப்பாணம் சோனகர் வட்டாரத்தினூடாக செல்லும் நாவலர் வீதியில் அடிக்கடி போக்குவரத்து இடநெரிசல் ஏற்படுகின்றது. லொரிகள், பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் இவ்வீதியினூடாக செல்லும் போது எதிர் திசையில் ஒரு வாகனம் வந்தால் வாகனங்கள் நெரிசல்களை எதிர்கொள்கின்றன. இதனால் போக்குவரத்து சில நிமிடங்கள் தொடக்கம் சில மணி நேரங்கள் வரை தடைப்படுகின்றது. இதனால் சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்கள் என்பவற்றில் பிரயாணம் செய்வோரும் போக்குவரத்து நெரிசல்களில் மாட்டிக் கொள்கின்றனர். எனவே  ஐந்து சந்தி தொடக்கம் புதுப்பள்ளி சந்தி வரையான நாவலர் வீதியை லொரிகள், கார்கள், வேன்கள் மற்றும் பாரவூர்திகளுக்கு ஒரு பக்கப் போக்குவரத்து பாதையாக்கினால் மக்களுக்கு சுலபமாக இருக்கும். 

சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோ வாகனங்கள் மட்டும் இருவழி போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படலாம். லொரிகள், கார்கள், வேன்கள் மற்றும் பாரவூர்திகள் என்பன ஹாதி அபூபக்கர் வீதியை அல்லது ஆஸாத் வீதியை தமது போக்குவரத்துக்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.  இதன் மூலம் தற்போது சனப்புளக்கம் குறைந்த ஹாதி அபூபக்கர் வீதி மற்றும் ஆஸாத் வீதி போன்றவற்றினூடாக வாகனப் போக்குவரத்து நடப்பதினூடாக அவ்வீதிகள் ஆட்கள் பிளங்குமிடமாக மாறும். இதனூடாக மேற்படி வீதிகளில் பகலிலும் இரவிலும் நடமாட மக்களுக்கு ஏற்படும் அச்சம் நீங்கும். மக்களும் வாகனங்களும் இப்பிரதேசத்தில் புளங்குவதினூடாக இவ்வீதிகளின் இருமருங்கிலும் மேலும் முஸ்லிம்கள் குடியேற வாய்ப்புண்டு.  வீதிகளை ஒற்றைப் போக்குவரத்து பாதையாக்குவதற்கு யாழ் மாநகர சபை மற்றும்  யாழ் போக்குவரத்து பொலிஸாருக்கும் எமுத்து மூலமான வேண்டுகோள் விடப்பட வேண்டும். 

மேலும் தற்போது வியாபாரிகள் பெரும்பாலும் மானிப்பாய் வீதியிலேயே வசிக்கின்றனர். அவர்களுடைய வியாபாரப் பொருட்களை பஸ்களில் ஏற்றி பல்வேறு இடங்களுக்கும் கொண்டு செல்வதற்கு இவ்வீதியால் இயங்கும் பஸ்கள் உறுதுணையாகவுள்ளன. இவ்வாறான போக்குவரத்து வசதியொன்று சோனகதெருவினூடாக செய்யப்பட வேண்டுமென்பது எமது கோரிக்கையாகும். பொம்மைவெளி புதியசோனகதெருவின் அராலி வீதியூடாக வரும் பஸ்களில் ஒன்றிரண்டை ஒஸ்மானியா கல்லூரி வீதி வழியாக (டாப்ஸ் வீதி) திருப்பி ஹாதி அபூபக்கர் வீதியினூடாக மீண்டும் திருப்பி வைத்தீஸ்வரா சந்தியில் வைத்து மானிப்பாய் வீதியை அடையச் செய்யலாம். இவ்வாறு காலை 8.00 மணி 8.30க்கும் பிறகு மதியம் 1.00 மணிக்கு ஒரு பஸ்ஸும் பிறகு பிற்பகல் 5.00 மணி 5.30 மணிக்குமாக பஸ்களை இப்பிரதேசத்தினூடாக ஓடச்செய்ய ஒழுங்கு செய்யலாம். 

இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாண பிராந்திய பணிப்பாளரை சந்தித்து கதைப்பதனூடாக பஸ் போக்குவரத்து ஏற்பாட்டை செய்து கொள்ளலாம். இதனை யாழ் கிளிநொச்சி சம்மேளனமும் யாழ் மாநகர சபையின் முஸ்லிம் உறுப்பினர்களும் ஒன்றினைந்து செய்து கொள்ளலாம். இவ்வாறான செயற்பாட்டு ரீதியான திட்டங்கள் மீள்குடியேற்றத்தை இன்ஷா அல்லாஹ் துரிதமாக்கும்.      

1 comment:

Powered by Blogger.