Header Ads



முஸ்லிம் திணைக்களம் தமக்கு தேவையான நிதியை கேட்பதில்லை - மத விவகார பிரதிமைச்சர்


முஸ்லிம் சமய திணைக்களம் தமக்குத் தேவையான நிதியை கேட்கவில்லை. கேட்டிருந்தால் நாம் கொடுத்திருப்போம் என புத்தசாசன மற்றும் மத விவகார பிரதி அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற சபை நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி. சஜித் பிரேமதாஸ் முஸ்லிம் சமய திணைக்களத்திற்கு அரசாங்கம் உரியவகையில் நிதி ஒதுக்குவதில்லை மற்றும் முஸ்லிம் சமய திணைக்களத்திற்கு நிதி ஒதுக்கப்படுவதும் குறைந்துவிட்டது என குற்றம் சுமத்தினார்.

இதற்கு பதில் அளிக்கையிலேயே புத்தசாசன மற்றும் மத விவகார பிரதி அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்தன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

முஸ்லிம் சமய திணைக்களம் தமக்குத் தேவையான நிதியை கேட்கவில்லை. கேட்டிருந்தால் நாம் கொடுத்திருப்போம். மேலும் முஸ்லிம்களின் மத வழிபாட்டு தலங்களுக்கு எதிராக பாரதூரமான சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. முஸ்லிம்களின் மத தலங்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

No comments

Powered by Blogger.