கவர்ச்சிகரமான பாடசாலைகள் நகரப் பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை - குருநாகல் முதல்வர்
(இக்பால் அலி)
பாடசாலைக்கு பிள்ளைகளைச் சேர்ப்பதற்கு ஆவணங்களை சரியான முறையில் தயாரித்துத் தரும் போலிக் கச்சேரி பல நகரில் நடத்தப்படுவதன் காரணமாக உண்மையான ஆவணங்களை முன்வைக்கும் நகரப் பிள்ளைகளுக்கு கவர்ச்சிகரமான பாடசாலைகள் கிடைப்பதில்லை என்று குருநாகல் மாநகர சபை முதல்வர் தெரிவித்தார்.
தேவையான ஆவணங்களை மூன்று இலட்சம் ரூபா கொடுத்து போலியான ஆவணங்களை தயாரிக்கின்றனர். இந்தப் போலியான ஆவணங்கள் தயாரிக்கும் கச்சேரிக்கு பாடசாலை அதிபர்களின் பங்களிப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
நகரில் உள்ள பிள்ளைகளின் வதிவிடங்களின் உறுதி தந்தையுடைய அல்லது பாட்டனுடைய பெயர் இருத்தல் வேண்டும். அதேபோல் அரச இடங்களிலோ அல்லது விஹாரையின் இடங்களிலோ வதிவிடமாக் கொண்ட நகரப் பிள்ளைகளின் உண்மையாகப் பூர்த்தி செய்யப்பட்டு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. இந்த விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளாமல் மறுதலிப்பதுடன் நாட்டுப்புற பிரதேசப் பிள்ளைகளின் போலியான விண்ணப்பங்கள் கவனத்திற் கொள்ளவதற்கு கவர்ச்சிகரமான பாடசாலை அதிபர்கள் நடவடிக்கை எடுப்பதன் காரணமாக இந்த அநியாயம் நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.
2007 ஆம் ஆண்டு பிறந்த சிறார்கள்தான் 2013 ஆம் ஆண்டு பாடசாலைக்கு முதலாம் தர வகுப்புக்குச் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 2007 ஆம் ஆண்டு குருநாகல் நகரில் பிறந்த ஆண் மற்றும் பெண் சிறுவர்களின் மொத்த தொகை 403 பேர் என சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிங்கள மற்றும் கிறிஸ்தவ சிறுவர்கள் 243, முஸ்லிம் சிறுவர்கள், 110, தமிழ் சிறுவர்கள் 50 பேர் என உள்ளன.
சிறுவர்களைச் சேர்த்துக் கொள்வதற்காக குருநாகல் நகரில் 14 பாடசாலைகள் உள்ளன. அதில் இரு முஸ்லிம் பாடசாலைககளும் ஒரு தமிழ் பாடசாலையும் உள்ளன. மிகுதி 11 பாடசாலைகளுக்கும் 243 சிறுவர்களை பாடசாலைக்குச் சேர்த்துக் கொள்ள முடியாமைப் போனதற்கான காரணம் போலியான ஆவணங்களை பயன்படுத்துவதன் மூலமாகத் தான் ஆகும். சிறுவர்களை பாடசாலைக்குச் சேர்க்கும் போது உறுதி ஆவணங்களைப் பார்க்கும் போது அது அமைந்திருப்பது தந்தை பெயருக்கு, பாட்டன் பெயருக்கு இல்லாவிட்டால் விஹாரை இடத்தில், அரச இடங்களில் வசிப்பிடமாகக் கொண்டதன் காரணமாக நகரப் பிரதேச சிறுவர்களுக்கு நகரப் பாடசாலையில் கல்வி பயில இராசியற்றவர்களாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குருநாகல் நகரில் மலியதேவ மகளீh கல்லூரியில் சிறுவர்களைச் சோத்துக் கொள்வதற்காக வதிவிடத்தைப் பார்ப்பதற்கு பௌத்தாலோக மாவத்த கிராம உத்தியோகஸ்தர் பிரிவு சிறப்பான பொறுப்புணர்வுடன் செயலாற்றப்படுகிறது. அதே போன்று மலியதேவ ஆண்கள் கல்லூரியில் சிறுவர்களைச் சேர்த்துக் கொள்வதற்காக ஒலுப்புகெதர கிராம சேவகர் உத்தியோகஸ்தர் பிரிவும் உள்ளது. இந்த வசத்தில் பணிபுரியும் கிராம உத்தியோகஸ்தர் பிரிவிலேயே போலியான ஆவணங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தப் பிரதேசத்திலேயே கூடுதலாக கள்ளத்தனமான வதிவிடப் பதிவினைச் செய்கின்றனர். இது நிறுத்தப்பட வேண்டும். நியாயமான முறையில் நகரப் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்வதற்கு வழிவகுப்பதுடன் தெளிவுபடுத்துவதற்காக நகர சபை நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
பாடசாலைகள் விடும் நேரத்தில் குருநாகல் நகரில் பாரிளவிலான வாகன நெருக்கடிகள் எழுகின்றன. இதற்குக் காரணம் கள்ளத்தனமான ஆவணங்கள் தயாரித்து நகரப் பாடசாலைக்கு விண்ணப்பங்கள் செய்து அனுமதியைப் பெற்றுக் கொண்ட சிறுவர்கள் தூரப் பிரதேச இடங்களிலிருந்து வருவதனாலேயே ஏற்படுகிறது. ஹெட்டிப்பொல, அளவ்வ, வரகாப்பொல, வாரியப்பொல, மாஹோ, கல்கமுவ, பிங்கரிய, நாரம்மல, கிரிஉல்ல, மாவத்தகம ஆகிய பிரதேசங்களிலிருந்து பெருந் தொகையான மாணவர்கள் வருகை தருவதாக முதலவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment