மற்றவர்கள் ஏன் எரிச்சலடைகிறார்கள்..?
வியர்வை நாற்றத்துடன் நடமாடும் ஊழியர்களால், மற்றவர்கள் எரிச்சல் அடைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.நெதர்லாந்து நாட்டில், சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பணி இடங்களில் சக ஊழியர்களின் சுகாதாரமின்மையால், பல ஊழியர்கள் சங்கடப்படுவதாக, இந்த ஆய்வு தெரிவிக்கிறது.வியர்வை நாற்றத்துடன் திரியும் ஊழியர்களை கண்டு, பெரும்பாலானவர்கள் எரிச்சல் அடைகின்றனர்.
கழிப்பறைக்கு சென்று விட்டு, கை கழுவாமல் வருபவர்களை கண்டு, மற்றவர்கள் சங்கடப்படுகின்றனர்.
வாய் துர்நாற்றமெடுக்கும் ஊழியர்களுடன் பேசுவதற்கு சக ஊழியர்கள் தயங்குகின்றனர்.
நொறுக்கு தீனிகளை சத்தம் போட்டு மென்று சாப்பிடுவர்கள் மீதும், மூக்கு பொடிகளை சத்தமாக உறிஞ்சுபவர்கள் மீதும் சக ஊழியர்கள் வெறுப்படைகின்றனர்.
மேஜையை சுத்தமாக வைத்து கொள்ளாமல், குப்பையாக வைத்திருப்பவர்கள் மீதும், சக ஊழியர்கள் எரிச்சல் அடைகின்றனர்.இது போன்ற ஊழியர்களால் தான், அலுவலகத்தில் எலிகளும், கரப்பான் பூச்சிகளும் பெருகுவதாக பலரும் புகார் தெரிவித்து உள்ளனர்.
இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment