முசலியில் திறமை காட்டிய மாணவர்களுக்கு கௌரவிப்பு (படங்கள்)
(இக்பால் அலி)
இடம்பெயர்ந்து சென்று மீண்டும் வந்து தம் பிரதேசத்தின் கல்வித் துறையை கட்டி எழுப்ப முக்கியத்துவம் அளிப்பதோடு மாத்ரமல்ல இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தக் கூடிய நல்ல காரியங்கள் செய்யவதைப் பார்க்கும் போது மனம் பூரிப்படைகிறது. இந்த நல்ல நிகழ்வுகள் முசலிப் பிரதேச எல்லையைத் தாண்டி பரந்து பட்ட ரீதியில் செல்ல வேண்டுமென்று முசலி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ் தாவித் தெரிவித்தார்.
அகத்திமுறிப்பு சமூக அபிவிருத்திக்கான இஸ்லாமிய அமைப்பு ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் முசலிக் கோட்டக் கல்வி வலயத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 160 புள்ளிகளைப் பெற்று முதல் தரத்தில் சித்தியெய்திய அரிப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் மஹா வித்தியாலத்தின் மாணவன் கே டிலோனையும் மற்றும் அகத்தி முறிப்பு கிராமத்தைச் சேர்ந்த வேறு பிரதேசங்களில் படித்துக் கொண்டிருக்கும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சிதிதியெய்திய மாணவர்களையும் மன்னார் அகத்தி முறிப்பு அரசினர் முஸ்லிம் கழவன் பாடசாலையில் 100 க்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அகத்தி முறிப்பு அமுக பாடசாலையில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வு மேற்படி நிறுவனத்தின் தலைவர் ஆசிரியர் மௌலவி எ. எம். நஜுமுதீன் தலைமையில் நடைபெற்றது. அமைப்பின் போசகரும் அகில இலங்கை சமாதான நீதவான், கலாபூசணம், இரத்தின தீபம், அஷ்ஷெய்க் செய்னுதீன் பரீத் (அகத்திமுறிப்பான்) முன்னாள் தலைவர் சிரேஷ்ட பொறியியலாளர் எ. எல். புர்ஹானுதீன், பொருளாளர் பிரபல வர்த்தகப் பிரமுகர் கே. நயீம், பாடசாலை அதிபர் எஸ். கலிலுர்ரஹ்மான் உள்ளிட்ட பலருடன் பெற்றோர்கள், பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரதம அதிதி கோட்டக் கல்வி பணிப்பாளர் எஸ். தாவித் அங்கு கருத்துத் தெரிவிக்கை இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார்
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,,
இவ்விழா 100 விகிதம் மன நிறைவைத் தருவதாகவும் குறிப்பாக இங்கு ஒரு தமிழ் மாணவனுக்கு அதி கூடிய விருதுகள் வழங்கி கௌரவித்து இருப்பது மெச்சத்தக்க செயல் என்றும் இன நல்லுறவுக்கு இந்நிகழ்வு பெரும்பாலமாக அமையும் என்று அவர் தெரிவத்தார்.
இப்படியான ஒரு நிகழ்வை நான் எங்கேயும் காண வில்லை. அகத்திமுறிப்பு கிராமம் பற்றிய ஆய்வு நூலொன்றை வெளியிடப்பட வேண்டும். எனவே அதற்கான வேண்டுகோளை இவ்விழாவில் கல்விமான்களிடம் முன்வைக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிழ்வில் விசேடமாக 160 புள்ளிகள் பெற்ற மாணவன் டிலோனின் பெற்றோர் கண்ணீர் மல்க மேற்படி இவ்வமைப்புக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். அத்துடன் ஆங்கில ஆசிரியர் எஸ்தாக்கி எஸ்கலின் ஆங்கில மொழியில் நன்றியுரை நிகழ்த்தினார்.
Post a Comment