மமதையுடன் செயற்பட்ட சந்திரிக்கா அரசு கவிழ்ந்துது போன்று மஹிந்த அரசும் கவிழும்
"முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தானே ஆட்சியில் நீடித்து நிலைப்பேன் என்ற மமதையுடன் பேசினார். ஆனால் எதிர்பாராத நேரத்தில் அவருடைய ஆட்சி கவிழ்ந்தது. அதே போன்றுதான் இந்த அரசும் அதி விரைவில் கவிழும்'' என்று ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணா நாயக்க கூறினார்.
நாடாளுமன்றம் நேற்று சனிக்கிழமை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதம் நடைபெற்றது. ரவி கருணாநாயக்க விவாதத்தை ஆரம்பித்து பேசும் போது மேலும் கூறியதாவது:
"திவிநெகும' சட்டவரைவு நடைமுறைக்கு வந்தால் எதிர்க்கட்சி அழித்துவிடும் என்று அரச தரப்பில் கூறுகின்றனர். தாமே ஆட்சியில் நிரந்தரமாக இருக்கப்போகின்றோம் என்று கருதுகின்றனர். இப்படித்தான் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவும் இறுமாப்புடன் பேசினார்.
அவருக்குத் தெரியாமலே அவரது ஆட்சி கவிழ்ந்தது. அதி விரைவில் இந்த அரசுக்கும் அந்த நிலை ஏற்படும். நாடெங்கிலும் 666க்கும் மேற்பட்ட ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. ஆடைத் தொழிற்சாலைகளில் ஊழியர்களுக்குக் கூடுதலான வேலை, குறைந்த சம்பளம் என்பதே வீழ்ச்சிக்கான காரணம்.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் கமரனும் மியான்மாருக்கு முதலீட்டாளர்களுடன் செல்கின்றனர். அப்படி இங்கும் முதலீட்டாளர்கள் வர வேண்டும். அரசுகள் மாறலாம். ஆனால் பொருளாதாரக் கொள்கையில் மாற்றம் இருக்கக் கூடாது என்றார்.
Post a Comment