Header Ads



ஆசியாவின் அதிசய நாடாக மறுவதற்கு பட்டதாரிகளின் பங்களிப்பு அவசியமாம்..!

(இக்பால் அலி)

தற்போது பயிலுனர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ள பட்டதாரிகள் யாவரும் எதிர்வரும் 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 23 திகதி அளவில் நிரந்த சேவையில் நியமிக்கப்படவுள்ளனர் அதற்குரிய திறைசேரி நிதி ஒதுக்கீடுகள் இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தின் தலைவரும் தொலைத் தொடர்புகள் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சர் ரஞ்ஜித் சியாம்பலபிடிய தெரிவித்தார்.

மாவத்தகம தேர்த்ல் தொகுதியின் சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மாவத்தகம சாமோதய கேட்போர் கூடத்தில் மாவத்தகம பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் மல்லவப்பிடிய பிரதேச செயலாளர் பிரிவுகளிவும் பயிலுனர் பட்டதாரிகளாக சேர்த்துக் கொள்ளப்பட்ட 950 பட்டதாரிகள் மத்தியில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போது  அமைச்சர் இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,,

மஹிந்த சிந்தனையின் 51400 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளன. இது சாதாரண விடயமல்ல இதனை மஹிந்த ராஜபக்ஷவின் மூலம் தான் செய்ய முடியும். குருநாகல் மாவட்டத்தில் 6000 பட்டதாரிகளுக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் அதி கூடிய பட்டதாரிகள் இந்த மாவட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்தப் பட்டதாரிகள் நியமனத்தின் போது எந்தக் கட்சி வேறுபாடுகளும் பார்க்க வில்லை. சுந்திர பட்டதாரிகள் சங்கத்தில் இணைந்து கொள்கின்ற போது ஜபாதிபதிக்கு ஆதரவாகச் செயற்பட்டவரா அல்லது இல்லையா எனப் பார்க்காமல் யாவரும் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளன. 

பட்டதாரிகள் என்போர் சாதாரணமானவர்கள் அல்லர். பல்லைக்கழகம் சென்று நன்கு கற்று வந்தவர்கள்.. பல்கலைக்கழக வாய்ப்பு எல்லோருக்கு கிடைப்பதில்லை. இந்த நாட்டில உள்ள் அனைத்து மக்களுக்கு உங்களுடைய சேவை கிடைக்கப்பெறவுள்ளன. ஆசியாவில் ஆச்சரிமிக்க நாடாக நாட்டை  அபிவிருத்திக்கு  செய்வதற்கு உங்களின் பங்களிப்பு மிக அவசியமானதாகும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் குருநாகல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் நெரஞ்சன் விக்கிரமசிங்க மற்றும் மாவத்தம பிரதேச சபைத் தவிசாளர் உபல் பேரோரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.







No comments

Powered by Blogger.