Header Ads



மஹிந்த ராஜபக்ஷ யுகத்தில் நீதித்துறையில் பல புரட்சிகரமான மாற்றங்கள் - ஹக்கீம்


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுகத்தில் நீதித்துறையில் பல புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  யுகத்தில் நீதித்துறையில் பல புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனினும், நீதியமைச்சின் குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய பெரும்பாலானோர் பிரதம நீதியரசர் தொடர்புபட்ட விடயத்தில் அரசு நீதிமன்றத்துக்கு எதிராகச் செயற்படுகிறது என்பதைக் காட்டும் வகையிலேயே கருத்துக்களை முன்வைத்தனர்.

நாம் ஒருபோதும் நீதித்துறை சீர்குலைய இடமளிக்க மாட்டோம். எதிர்க் கட்சியினரால் விமர்ச்சிக்கப்படுகின்ற பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை நீதிமன்ற பிரதானிக்கு எதிரானதேயன்றி நீதித்துறைக்கு எதிரானதல்ல. இதனை முழு நீதித்துறைக்கும் எதிரானது என காட்ட முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நீதித்துறையில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தும் வருடமாக அடுத்த வருடம் அமையும். தேங்கிக் கிடக்கும் வழக்குகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. சிவில் வழங்குகளின் தாமதங்களை நிவர்த்திக்கும் வகையில் நீதிச் சேவை ஆணைக்குழுவின் உறுதுணையுடன் பல காத்திரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.




No comments

Powered by Blogger.