இலங்கை வாழ் ஒவ்வொரு முஸ்லிமினதும் கவனத்திற்கு...!
(சப்ரான் சலீம்)
எமது நாட்டில் முஸ்லிம் சமுகத்துக்கு எதிராக பல சதித்திட்டங்கள் தீட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதனை நாம் அறிவோம். இவ் வேளையில் நாம் அரசியல் தலைமைகளுக்கும் மற்றும் மார்க்க தலைமைகளுக்கும் மட்டும் அச் சவால்களை பொறுப்புச் சாட்டாது நாம் ஒவ்வொருவரும் எம்முன்னுள்ள சவால்களுக்கு எம்மாலான பணிகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் தலைமகளுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அந்த வகையில் இலங்கை வாழ் ஒவ்வொருவரு முஸ்லிம் மீதும் உள்ள சில பணிகள் வருமாறு
1. நாம் அனைவரும் எம்மத்தியிலுள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்று பட வேண்டும்.
2. ஒவ்வொருவரு முஸ்லிமும் ஆன்மீக ரீதியில் தம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும். இஸ்லாம் சொல்லுகின்ற , காட்டித் தந்த வழிமுறைகளை முழுமையாக பின்பற்றி உண்மையான முஸ்லிமாக வாழ வேண்டும். நம்பிக்கைகுரியவர்களாக , வாக்கு மீறாதவர்களாக திகழ வேண்டும்.
3. எமது பிரச்சினைகளை அல்லாஹ்விடம் பாரம் சாட்டி அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்திப் பிரார்த்திக்க வேண்டும்.
4. எம்மத்தியில் சிங்கள , ஆங்கில மொழி அறிவு , எழுத்தாற்றல் உள்ளவர்கள் இஸ்லாம் பற்றியும் , முஸ்லிம்கள் பற்றியும் , முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் தேசிய , சர்வதேச சிங்கள , ஆங்கில பத்திரிகைகளுக்கும் , சஞ்சிகைகளுக்கும் எழுத வேண்டும்.
5. அந்நிய இன மக்களுடன் நல்ல முறையில் (நல்ல அஃலாக்குடன்) பழக வேண்டும். (பெரும்பான்மை இன மக்களில் ஒரு சிலரே எமக்கு எதிராக செயற்படுகின்றனர்.)
6. இலங்கை மண் எங்களுக்கும் சொந்தமானது.எமது நாடு என்ற உணர்வுடன் செயற்பட வேண்டும். (எம்மில் சிலர் இது சிங்களவர்களது நாடு என்ற எண்ணத்தில் உள்ளனர். அதை தவிர்த்து இது எனது தாய் நாடு என்பதை உணர வேண்டும்.) மேலும் இலங்கை நாட்டில் ஒரு சிங்களவர்க்கு உள்ள உரிமை ஒரு முஸ்லிமுக்கும் உண்டு என்பதை உணர வேண்டும்.
7. பெரும்பான்மை இன நண்பர்களுடன் நல்ல முறையில் அன்பளிப்புகளை இஸ்லாமிய வரையறையினுள் பரிமாறி இன ஒற்றுமையை பேணல்.
8. எம்மத்தியில் (ஊர் வாரியாக) சிறந்த ஆரோக்கியமான சிவில் சமூக அமைப்புக்களை உருவாக்குதல்.
9. எம்மத்தியில் உள்ள தேசிய அமைப்புக்களை பலப்படுத்தல். அவ் அமைப்புக்கள் உயர் மட்ட ரீதியில் சவால்களை முறியடித்தல்.
10. எமது அரசியல் தலைமைகள் ஓரணியில் நின்று செயற்பட வலியுறுத்தல்.
11. எமது வணக்கஸ்தலங்களையும் , மத்ரஸாக்களையும் , கலாச்சாரத்தையும் , சின்னங்களையும் , உரிமைகளையும் , சொத்துக்களையும் பாதுகாக்க ஆரோக்கியமான திட்டங்களை வகுத்தல்.
12. இன்னும் பல......................................................................................................................
அனைத்து முஸ்லிம்களும் எப்போதும் ஓரணியில் நின்று எம் முன்னுள்ள சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
யா அல்லாஹ்..............................!
இலங்கை மற்றும் சர்வதேச முஸ்லிம்களையும் , மஸ்ஜித்களையும் , மத்ரஸாக்களையும் , இஸ்லாமிய சின்னங்களையும், உரிமைகளையும் , சொத்துக்களையும் பாதுகாத்தருள்வாய்க.
ஆமீன்.
மக்களே சிந்திப்போம் செயல்படுவோம். உண்மையிலேயே நாம் இதைப்பற்றி சிந்தனை செய்யவேண்டிய காலகட்டத்தில் இருக்குறோம் என்பதை மறந்துவிட வேண்டாம். நமது சமுகத்தை பாதுகாப்பது நமது அனைவரினதும் பொறுப்பு.
ReplyDeleteAameen
ReplyDeleteநிச்சயமாக இந்த விடயம் தொடர்பாக
நம் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதே போல் மேற்கொண்டுள்ள
நெறிமுறைகளை நாங்கள் நடைமுரயினில் கொண்டு வருதல் மிக மிக அவசியமானதே. நன்றி உங்களின் அருமையான தகவலுக்கு. நிச்சயமாக நம் முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் ஒன்று படுவோமானால்
இஸ்லாத்தையும் , இலங்கை வாழ் முஸ்லிம்களையும்
இஸ்லாமிய விழுமியங்கள் , பள்ளிவாயில்கள் மற்றும் மதரசாக்கள் அனைத்தையும் ஓர் வழிப்பாதையில் பாது காப்போம். இதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ். எங்களுக்கு ஈமானை தந்தருள்வானாக . ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன் .
அன்புள்ள இஸ்லாமிய சகோதரர்களுக்கு
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
மேற்குறிப்பட்ட நற்பழக்கங்கள் இஸ்லாம் இலகுவாக பரவுவதற்கான அடிப்படை விடயங்களாக காணப்படுகின்றன .
எனவே அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் ஒன்று சேர்ந்து எமது நாட்டில் பெரியதொரு வளமாக காணப்படும் முஸ்லிம் பாடசாலைகள் என்ற வளத்தை மேற்படி நட்பழக்கங்களை வளர்க்கக்கூடிய இடமாக அமைத்துக்கொண்டால்
சிறந்த இஸ்லாமிய முன்மாதிரிகளை உருவாக்க முடியும் .
இலங்கை முஸ்லிம் அனைவரும் சகோதரர்கள் எனவே எம்மத்தியில்யிருக்கின்ரசிரு பிலவுகலைமரந்து விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக வாழவேண்டியகாலம் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு நேர்வழியைகாட்டுவானக ஆமீன் .
ReplyDeleteசகோதரர் சப்றான் சலீம் அனைத்து முஸ்லிம்களையும் விழித்துக்கொள்ளும் அளவில் தனது கருத்துக்களை முன் வைத்துள்ளார் எனவே அன்புச் சகோதரர்களே நாம் அனைவரும் விளித்துக்கொள்வோமாக
ReplyDeleteoru singhala inawathi ennidam facebookil sollukiran ilankai muslim kalin kalam koodiya seekkiram mudivukkuk konduwaruwom endru. emathu arasiyal waathikalum koncham thunichchalak ondru sera wendum. bodu bala sena iyakkaththai ineemelum pesa widamal thadukka wendum, awarkal appattamana poikalai solli thirindu kondru irukkirarkal.
ReplyDeleteசிறந்த பதிப்பு, இலக்குகள் தீர்மானது.இவை அனைத்தையும் நடைமுறைபபடுத்த தேவையான ACTION ப்ளான் ஒவ்வொரு இடத்துக்கு தகுந்த மாதிரி தீர்மானிக்கும் பொறுப்பு ஒவ்வொரு சமூக,சமய,ஊர்,குழுக்கள் தலைவர்கள், அங்கத்தவர்கள் சார்ந்தது. இன்றைக்கு எனது ACTION ப்ளான் சிங்கள நண்பனுக்கு ஒரு E-MAIL...இது ஒரு துளி........
ReplyDeleteபிரிந்து இருக்கும் இந்த சமூகத்திற்கு
ReplyDeleteவஹியின் எச்சரிக்கை !
பிரிந்திருப்பது அல்லாஹ்வின் தண்டனையாகும். !
உங்களுக்கு மேலிருந்தோ அல்லது உங்களது பாதங்களுக்கு கீழிருந்தோ உங்களுக்கு வேதனையை அனுப்பிடவும் அல்லது உங்களை பல பிரிவுகளாக ஆக்கி ஒருவரின் கொடுமையை மற்றவர் சுவைக்கச் செய்திடவும் அவன் ஆற்றல் உடையவன் என்று (நபியே) நீர் கூறுவீராக ! (6:65)
பிரிந்திருப்பவர்கள் இணை கற்பிப்போரே !
தங்கள் மார்க்கத்தை பல பிரிவுகளாக பிரித்து, தாங்களும் பல பிரிவுகளாக ஆகிவிட்ட இணை கற்பிப்போரில் நீங்கள் ஆகிவிடாதீர்கள். (30 : 31 , 32)
பிரிந்திருப்பவர்களுக்கும் நபிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. !
தங்கள் மாரக்கத்தை பிரித்து பல பிரிவுகளாக பிரிந்து விட்டவர்களுடன் (நபியே) உமக்கு யாதொரு சம்பந்தமும் இல்லை (6: 159)
பிரிந்திருப்பவர்கள் அல்லாஹ்வின் அருளற்றவர்கள் !
உமது ரப் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் ஒரே கூட்டத்தினராக ஆக்கியிருப்பான். உமது ரப் அருள் புரிந்தோரைத் தவிர மற்றவர்கள் முரண்பட்டோராகவே இருந்து கொண்டிருப்பார்கள். (11: 118 , 119)
பிரிந்திருப்பவர்கள் வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். !
அல்லாஹ் நாடியிருந்தால் ஒரே சமுதாயமாக ஆக்கியிருப்பான். மாறாக தான் நாடியோரை அவன் வழிகேட்டில் விடுகின்றான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகின்றான். (16:93)
பிரிவினை நரகத்திற்கே இட்டுச் செல்லும். !
எனது இந்த உம்மத் 73 பிரிவுகளாக பிரிவார்கள். 72 நரகமும் ஒரு கூட்டம் சுவனமும் செல்லும். அது அல்ஜமாஅத் ஆகும். (அபூதாவுத் 4599)