திரைப்படங்களில் முஸ்லிம் விரோத போக்கு...!
(இத்ரீஸ் ஹஸன் ஸஹ்வி)
“துப்பாக்கி” திரைப்படத்தின் முஸ்லிம் விரோத போக்குப் பற்றி விவாதங்களும், மன்னிப்பு நாடகங்களும் நடந்து கொண்டிருக்கின்றது. கமலஹாஷனின் முஸ்லிம் விரோதகுனம் விஷ்பரூபமேடுக்கக் காத்துக் கொண்டிருகின்றது. இவைகளுக்கு மத்தியில் அவை தொடர்பாக எனது சில கருத்துக்கள்.
திரைப்படங்களில் முஸ்லிம் விரோதப்போக்கு தொடர்ந்து வரும் ஒன்று. இது உலக முஸ்லிம்களை இழிவுபடுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதி. வெகு அன்மையில் அமெரிக்காவில் நாயகத்தை இழிவுபடுத்தும் ஒரு நாடகம் அரங்கேரியது, நேற்றுவரை இந்தியாவில் நடந்தது இன்றும் நடந்துள்ளது. புதிதல்ல, நாமும் நமது மார்க்கமும் ஊடகங்களில் தாக்கப்படுவது.
படங்களில் முஸ்லிம்களை தாக்குவதும் தெரியாமல் இடம்பெற்றுவிட்டது மன்னியுங்கள் எனக்கோரி நீக்குவதும் திரையுலகின் வேடிக்கை நிறைந்த வாடிக்கையான நடவடிக்கையாகிவிட்டது. பல ஆயிரம் நுணுக்கங்கள் பார்த்தும், இந்து சாஸ்த்திர சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்தும் படம் எடுக்கும் இவர்கள், இஸ்லாம், முஸ்லிம் உலகம் பற்றிய எதார்த்தங்களை மறந்தது ஏன். அதுபற்றி தெரியாமல் போனது எப்படி. இது அபத்தம், முஸ்லிம்களை முட்டாள்களாக்கும் முயற்சி. இவர்களின் திட்டமிட்ட செயல். இழிவான விளம்பர யுக்தி என்பதே உண்மை.
இந்தியாவைப் பொருத்தவரை வேஷம் போடும் கூத்தாட்டம் பிரதான தொழில். நன்றாய் திறந்து, சிறப்பாய் நடித்து, வேஷ நாடகம் போட்டு தங்களை ஏமாற்றி, தங்களையே ஏய்த்துப் பிழைக்கும் கூத்தாடிகளை கடவுளாக்கி, தலைவர்களாக்கி, உலக நாயகர்களாக்கி, கலாநிதிப்பட்டம் கொடுத்துக் கெளரவித்து, அவனுகளின் கட்டவுட்டுகளுக்கு தன் சொந்தப்பணத்தில் பாலபிஷேகம் செய்து மகிழும் புத்தி ஜீவிகள் நிறைந்த நாடு இந்தியா.
இந்த மக்களிடத்தில் தன் தொழிலில் இலகுவாக இலாபம் ஈட்ட தன் வேஷ நாடகத்தை இலவசமாக விளம்பரப்படுத்த இழிவான மிகவும் கேவலமான தரங்கெட்ட பல வழிகளை திரையுலகினர் தொடர்ந்து கையாண்டு வருகின்றனர். குறிப்பாக முஸ்லிம்களை இழிவுபடுத்தினால் மற்ற சமயத்தவர்களிடத்தில் தன் கதைக்கும் சதைக்கும் நல்ல வரவேற்ப்புக் கிடைக்கும் என்பதனாலும் முஸ்லிம்கள் எதிர்த்தால் இலவச விளம்பரமும் கிடைக்கும் என்பதனாலும் இந்த வியாபார யுக்தியை தொடர்ந்து இந்தக் கூத்தாடிக் கூட்டம் செய்துவருகின்றது. குறிப்பாக இதைக் கூத்தாடிகலான காமகாசன் கமலஹாஷன், விஜயகாந்த், அர்ஜூன், இயக்குனர் மணிரத்தினம் தொடக்கம் பலர் தொடர்ந்து தன் படங்களில் செய்து வருகின்றனர். இதில் இன்று விஜய், முருகதாஸ் எனும் கூத்தாடிக் கூட்டம் புதிதாக இணைந்துள்ளது. அவ்வளவுதான்.
முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகளா? இஸ்லாம் தீவிரவாதத்தைத் தூண்டுகின்றதா? அப்பாவிகளைக் கொல்லுவோர் முஸ்லிம் பெயர்தங்கினாலும் அவர்கள் உண்மையான முஸ்லிம்களே இல்லை என்பது இஸ்லாத்தின் ஆணித்தரமான கருத்து. ஆராய்ந்து பாருங்கள் 98 வீதமான முஸ்லிம்கள் தீவிரவாதிகள் இல்லை. தீவிரவாதத்தை தூண்டும் ஒரு விகிதக் கருத்துக் கூட இஸ்லாத்தில் கிடையவே கிடையாது. முடிந்தால் நிரூபிக்கலாம். இது உலகத்திற்கே நீண்டநாளாய் இஸ்லாமிய அறிஞ்சர்களால் விடப்படும் சவால். யாரும் இதை இன்றுவரை சரியாய் எதிர்த்து நின்றதும் கிடையாது வென்றதும் கிடையாது.
காஷ்மீரில் அப்பாவி முஸ்லிம்களுக்கு இந்திய அரச பயங்கரவாதம் செய்யும் கொடூர கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் பற்றியோ, குஜராத்தில் நரமாமிசம் திண்ணி நரேந்திர மோடி செய்த மனிதப் படுகொலைகள் பற்றியோ, ஆர் எஸ் எஸ் போன்ற இந்துத் தீவிரவாதக் குழுக்கள் முஸ்லிம்களுக்கு இந்தியா முழுவதும் செய்துகொண்டிருக்கும் கொடுமைகள் பற்றியோ, இந்து தீவிரவாதிகளால் அயோத்தியோ பத்தி எரிந்தது அது பற்றியோ, இலங்கையில் விடுதலை புலிகள் எனும் இந்துப் பயங்கரவாத அமைப்பு முஸ்லிம்களுக்குச் செய்த கொடுமைகள் பற்றியோ, மியன்மாரில் பௌத்த மதகுருக்கள் நேரடியாகக் களத்தில் நின்று பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொளுத்திச் சாம்பலாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இஸ்ரேல் எனும் முறை தவறிப் பிறந்த யூத நாடு மனிதாபிமானமின்றி அப்பாவி பலஸ்தீன் மக்களுக்கு மிகவும் காட்டுமிராண்டிதனமான அட்டூழியங்களை செய்து கொண்டிருக்கின்றது இது உலகறிந்த உண்மை இது பற்றியோ, அமெரிக்க தலைமையிலான கிறிஸ்தவ நாடுகள் உலகம் முழுவதும் செய்யும் அடாவடித்தனங்கள் பற்றியோ எவனாவது படம் எடுத்தானா. அப்படியான உண்மைக் கதைகளை படமாக எடுத்த முதுகெலும்புள்ள எந்த இயக்குனரும், கூத்தாடியும் இந்தியாவில் கிடையாது.
உண்மை இப்படி இருக்கும்போது எதார்த்தங்களுக்கு எதிராக படமெடுக்க முற்படுவது அபத்தமானதும் சமூக அமைதிக்கு ஆபத்தானதுமாகும்.
களைந்து காட்டிப் புளைப்பு நடத்தும் கூத்தாடிக் கூட்டங்களால் ஒரு போதும் இஸ்லாதின் கெளரவத்தை களைய முடியாது. அது எந்தத் தடையையும் தாண்டி மனித மனங்களில் ஊடுரும் வல்லமை படைத்த அல்லாஹ்வின் மார்க்கம். அவனே அதனின் பாதுவாவலன் அதன் வளர்ச்சிக்கு நேரடிப் போறுப்பாளன். இதை நாம் நிரூபிக்கத் தேவையில்லை, உலக எதார்த்தங்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.
இவர்களின் செயற்பாட்டின் மறுபகுதியில் சில தெளிவான உண்மைகளும் இஸ்லாதிற்கான பல நன்மைகளும் உள்ளது.
1. முஸ்லிம்களின் பாரிய எந்த முயற்சியும் இல்லாத, இஸ்லாத்தின் இயற்கையான வளர்ச்சி அதன் வேகம் பலரை பயப்படச் செய்துள்ளது. அதனை சிறுபிள்ளைத் தனமான செல்பாடுகளின் மூலம் வெளிப்படுத்த முற்படுகின்றனர்.
2. அமெரிக்க வர்த்தக மைய்யம் இஸ்லாத்தின் பெயரால் தாக்கப்பட்டு இஸ்லாத்திற்கு பயங்கரவாத முத்திரை குத்தப்பட்ட பின்னும், ஜேர்மனி, பிரான்ஸ், டென்மார்க் என பல நாடுகளில் இஸ்லாம் தொடர்ந்து இழிவு படுத்தப்பட்ட பின்னும் இஸ்லாம் உலகில் ஒரு துளியும் பின்னகரவில்லை மாறாக முன்னோக்கியே பாய்ந்துள்ளது. தாக்கத் தாக்க வேகமாக வளரும் இஸ்லாத்தைக் கண்டு வட்டிகான் தொடக்கம் உலகமே வியந்து வெந்து நொந்து போய் நிற்கின்றது.
இஸ்லாத்தை தாக்குவதாக நினைத்து தூக்கி விட்டுக் கொண்டிருகின்றார்கள். இவர்களின் முயற்சி இஸ்லாத்தினை மற்றவர் படிக்கத் தூண்டும் இலவச விளம்பம்.
இன்று இந்தக் கூத்தாடிகளுக்கு நாம் செய்ய வேண்டியது இதுதான்
1. அவர்களின் தோல்விக்காய் நான் உழைக்க வேண்டும்.
2. அவர்கள் சொல்லுவதுபோல் இஸ்லாத்தின் பெயரால் கீழ்த்தரமாக நடக்கும் ஒரு சிலரும் திருந்தும் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட வேண்டும்.
3. கேவலமான கூத்தடித் தொழில் ஒழியப் பாடுபட வேண்டும்
4. வரம்புமீறிப் போகும் இக்கூத்தாடிகளின் தொடராட்டத்தை இந்திய அரசும், உலக அரசுகளும் தடுத்து நிறுத்துமாறு ஒருமித்த குரலில் கோரிப் போராட வேண்டும்.
முண்டியடித்து முதல் வரிசையில் நின்று திரையரங்குகளை நிரப்பும் முஸ்லிம்கள் இருக்கும் வரை கூத்தாடிகளுக்கு காத்தாடிகள் போல் செயற்படும் ரசிகர் மன்றங்களில் எம் முஸ்லிம்கள் இருக்கும் வரை அவர்களின் வியாபார வெற்றியில் ஒரு முடியளவு நஷ்ட்டதைக் கூட எம்மால் ஏற்படுத்த முடியாது என்பது மட்டும் உண்மை.
நிச்சயம் அசத்தியம் அழிந்தே போகும். எல்லாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன்.
வணிக ரீதியாக படம் வெற்றுபெற வேண்டுமானால் இன்னும் அவர்களின் அரிப்பை தீர்த்துக் கொள்ள வேண்டுமானால்
ReplyDeleteதங்கள் தங்கள் குடும்பத்தார்களை வைத்து நீலப் படம் எடுத்து வெளியிட வேண்டியது தானே .1434 வருடங்களாக
எங்கள் உணர்வுகளுடன் யாருதான் விளையாடவில்லை.ஆரம்பம் என்று ஒன்று இருந்தால் முடிவும் இருக்கும்,என்பதை
இந்த உலகம் சீக்கிரம் புரிந்து கொள்ளும்.இதுவும் கருத்து சுதந்திரம் தான்
நமமுஸ்லிம் இஸ்லாமிய இளைஞர்கள் திரையரங்குகளில் முந்தியடித்து கொண்டு நிற்கும்போது எவ்வாறு நாம் இந்த சவால்களை வெற்றி கொள்ள முடியும்
ReplyDeleteyou have written a timely article,very good masha allah ..
ReplyDeletethese so called popular actors are not real heroes they are shameless people on earth.we must teach them a lesson ,use your pen to start it.alhamdullillah