Header Ads



சகல மாகாண சபைகளையும் உடனடியாக கலைத்துவிடுங்கள் - அமைச்சர் விமல்வீரவன்ச



(அஸ்ரப் ஏ சமத்)

13வது திருத்தச் சட்டத்தை அரசின் யாப்பில்  அகற்றி இந்த நாட்டில் உள்ள சகல மாகாணசபைகளையும் கலைக்கப்படல் வேண்டும். இச் சட்டத்தினை அகற்றுவதற்காக நாடு முழுவதிலும் உள்ள சகல கிராமம் கிராமங்களுக்கும்  நாங்கள் சென்று சகல மக்களுக்கு இதனை அறிவுறுத்தி பாரிய எழுச்சி கூட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும்  நடத்துவதற்கு. மக்களை ஒன்று திரட்டுவோம்.

ஜனாதிபதியும் அரசம் உடனடியாக இச் சட்டத்தினை பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்து அகற்ற வேண்டும். இதற்காக எந்தவொரு வெளிநாட்டு சக்திக்கும் ஜனாதிபதி அடிபணியக் கூடாது அல்லது இச் சட்டத்தினை அகற்றவதற்கு  மக்களது விருப்பு வாக்குக்கு கொண்டு வருதல் வேண்டும். 

இன்று (07) காலை 11.00 மணியளவில்  பொது நூலக ஆவணக் கேட்போர் கூட்டத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே மேற்கண்டவாறு  அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். 

அமைச்சர் விமல் வீரவன்ச மேலும் தெரிவிக்கையில்-

இவ்விடயத்திற்காக  வெளிநாட்டு சக்திகளுக்கும் இந்தியாவுக்கு அடிபணியாமலும் தமிழர் விடுதலை முன்ணனிக்கு எதிராகவும் இவ் விடயத்தில் மிக பலமாக நாங்கள் நிற்போம். அரசிற்கு அழுத்தம் கொடுப்பதற்குமே முதலில் நாம் இணைந்துள்ளோம் இதன் பின்னர்  நாடு முழுவதிலும் பல்கலைக்கழக மாணவர்கள்  பௌத்தத் தேரர்கள், புத்திஜீவிகள் என பலர் இதற்கு எதிராக எங்களுடன் இணைந்துள்ளனர். 

இந்த நாட்டில் மகாணசபை என்ற ஒரு சபை தேவையில்லை. அதனால் அரசின் பணம் வீன்விரயமாகின்றது. ஒரு நாடு ஒர் ஆட்சி என்ற ரீதியில் நாடு முழுவதிலும் ஆட்சியமைய வேண்டும். இம் மாகாண சபையினால் மக்களுக்கு ஒரு நன்மையும் கிட்டுவதில்லை. இதனால் மாகாணம் மத்திய அரசின் நிருவாகம் குழம்பிப்போயுள்ளது. விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது. இனி இச்சட்டம் தேiவியில்லை. 

தற்பொழுது பாராளுமன்றத்தில் 3-2 பங்கு பராளுமன்ற பலம் ஐனாதிபதி மஹிந்தவின் ஆட்சியில் இருக்கும்போது உடனடியாக 13வது திருத்தத்தை அகற்ற வேண்டும். 

1987ம் ஆண்டு ஜே.ஆர். ராஜிவ் காந்தி இணைந்து விடுதலைப்புலிகளின் ஆயுதத்திற்கு பயந்து 5 நீதிபதிகளை பயமுறுத்தி இதனை அமுல்படுத்தினார். அன்று இதற்கு எதிராக செயற்பட்ட பிரதம நீதியரசர்களை ஜே.ஆர் நீக்கினார். அன்று இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் விலகல் கடிதத்தில் கையொப்பம் வாங்கி வைத்திருந்தார். இச் சட்டம் நிறைவேறும்போது 150 பேருக்கும் மேற்பட்டோர்கள் சுடப்பட்டு அவர்களது சபத்தைக்கூட கையளிக்கவில்லை என  அமைச்சர் விமல் தெரிவித்தார்.

இந்த நாட்டில் டட்லி செல்வநாயகம் பண்டா செல்வாஒப்பந்தம் அமிர்தலிங்கம் ஜே.ஆர் ஒப்பந்தமென எத்தனையோ ஒப்பந்தங்கள் கைச்சாத்திட்ப்பட்டது. அவை ஒன்றும் இந்த நாட்டில் அமுல்படுத்தப்படவில்லை. அதே போன்றுதான் இந்த ஒப்பந்தத்தையும் கிழித்தெரிய வேண்டும். என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.  

No comments

Powered by Blogger.