Header Ads



முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றி அரசாங்கம் மேற்கொள்ளும் மோசடி - அம்பலப்படுத்தினார் சஜித்


(vi)முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு வருடாந்தம் 15 மில்லியன் ரூபாவே ஒதுக்கப்படுகிறது. ஆனால் அதிலிருந்து 9 மில்லியன் ரூபாவை பேரீச்சம்பழ வரியாக அரசாங்கம் மீளப்பெற்றுக் கொள்கிறது. ஏன் இந்தப் பாரபட்சம் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச இன்று சனிக்கிழமை காலை பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.

முஸ்லிம்களுக்கு நோன்பு காலங்களில் விநியோகிக்கும்பொருட்டு வெளிநாடுகளிடமிருந்து கிடைக்கப்பெறும் பேரீச்சம்பழங்களுக்கு அரசாங்கம் வரிவிதிப்பது நியாயமற்றது. 2011 ஆம் ஆண்டு 261,350 கிலோ பேரீச்சம்பழத்துக்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 9,023,070 ரூபாவை வரியாக செலுத்தியுள்ளது. ஆனால் குறித்த திணைக்களத்திற்கு அரசாங்கம் வருடாந்தம் 15 மில்லியன் ரூபாவை மாத்திரமே ஒதுக்கீடு செய்கிறது. தமக்குக் கிடைக்கின்ற வெறும் 15 மில்லியனில் 9 மில்லியனை மீண்டும் அரசாங்கத்திற்கே வரியாகச் செலுத்த வேண்டிய நிலைக்கு  முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தள்ளப்பட்டுள்ளது.

ஓட்டப் பந்தயக் கார்களை இறக்குமதி செய்வதற்கான வரியை இல்லாமல் செய்யும் அரசாங்கம் முஸ்லிம் மக்களுக்காக முஸ்லிம் நாடுகள் அன்பளிப்பாக வழங்கும் பேரீச்சம்பழத்துக்கு மாத்திரம் வரி விதிப்பதில் என்ன நியாயமிருக்கிறது?

2005 ஆம் ஆண்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு 35 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் 2010 ஆம் ஆண்டு 15 மில்லியன் ரூபா மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஏன் இந்த நிதியை 50 வீதத்துக்கும் அதிகமாக குறைத்தீர்கள்?

நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள முஸ்லிம் மத தலங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் அதிகரித்துச் செல்கின்றபோதிலும் அரசாங்கம் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இது தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட முன்னெடுப்புகள் தொடர்பில் மதவிவகார அமைச்சு உரிய பதிலளிக்க வேண்டும் எனவும்  சஜித் எம்.பி. கேள்வியெழுப்பினார்.
.

9 comments:

  1. இவருடைய உள்நோக்கம் அரசியலா கூட இருக்கலாம்.. அல்லாஹ் ஒருவனே அறிவான் . ஆனா ஒரு சிங்களவர் இவ்வளவு விஷயத்த சொல்றார்.. இவர விட உயர் பதவில இருக்குற எங்க முஸ்லிம் அமைச்சர்கள் இன்னும் அரசாங்கத்தோட புகழ் பாடுறாங்களே..

    ReplyDelete
  2. சேப்பு நிறப்புவது தானே சோனக எம்பிக்களின் முக்கிய பணி.....
    SAJITH OBETA BOHOMA ISTHUTI

    ReplyDelete
  3. Thanks Sajith. you are in alert but our Muslim fellows sleeping in the parliament.shame shame

    ReplyDelete
  4. Thank you very much Sajid pramadasa.

    ReplyDelete
  5. நாதி அற்ற முஸ்லிம் தலைமைகளுக்கு மத்தியில்......
    Great Job!! A big salute for u sir!!

    ReplyDelete
  6. இலங்கையில் உள்ள எல்லா அரசியல் கச்சிகளும் அரசியல் வாதிகளும் எதிர் கச்சியில் இருக்கும் வரை முஸ்லிம் சமூகத்துக்கு மிக ஆதரவாகவும் அன்பாகவும் இருப்பதும், ஆளும் கச்சியானதும் ஆளே மாறிவிடுவதும் நமக்கு ஒன்றும் புதிதல்ல. இவர் எப்படியோ?

    ReplyDelete

Powered by Blogger.