Header Ads



முசலி மகா வித்தியாலய அதிபர் குலாம் காதர் ஓய்வுபெற்றார்


(முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்)

மன்னார் முசலி ம.வி இன் அதிபராக நீண்ட காலம் கடமை புரிந்த எஸ்.எம்.குலாம் காதர்,  அண்மையில் ஓய்வு பெற்றார். முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தின் பின் இப்பாடசாலையின்மீள் உருவாக்கத்தில் தன்னையே முழுமையாகத் தியாகம் செய்து இப்பாடசாலையின் உயர்வுக்காகஅரும்பாடுபட்டார். இன்று இப்பாடசாலை மகிந்தோதய 1000பாடசாலை அபிவிருத்தித்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது. இவருக்கான பிரியாவிடை நிகழ்வு பாடசாலையின் ஆலவிருட்ச திறந்த வெளியரங்கில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் எஸ்.எம்.அகுபார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் திரு.சியான், கோட்டக்கல்விப்பணிப்பாளர், பழையமாணவர்கள்,பாடசாலை அபிவிருத்திசங்க உறுப்பினர்கள், பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர். 





No comments

Powered by Blogger.