விமானப்படை தளத்தை கைப்பற்றியுள்ள சிரிய புரட்சிப்படையினர்
சிரியாவில் அதிபர் ஆசாத் படைக்கும் புரட்சிப்படைக்கும் இடையே உள்நாட்டு போர் கடுமையாக நடந்து வருகிறது. சிரியாவின் தலைநகர் டமாஸ்கசுக்கும் வர்த்தகம் நகரம் அலெப்போவிற்கு இடையே உள்ள முக்கிய விமானதளமான டாப்டனாசை புரட்சிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இது குறித்த விடியோ காட்சிகளையும் இணைய தளத்தில் அவர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த சண்டையில் ராணுவத்தினர் பலரை கொன்றுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. கதார் நாட்டில் எதிர் தரப்பு புரட்சிக்குழுக்களின் சந்திப்பு நடைபெறவுள்ள நிலையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே ராணுவம் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ள கோலன் ஹைட்ஸ் பகுதிகளுக்கு சிரியா மூன்று ராணுவ டேங்கிகளை அனுப்பி வைத்துள்ளதாக இஸ்ரேல் ஐ.நா.விடம் குற்றம்சாட்டியுள்ளது.
Post a Comment