மீண்டும் வந்தார் நவவி - உம்றா செய்வோருக்கு இனி பதிவு அவசியம் - அமைச்சர் பௌஸி
(அஸ்ரப் ஏ சமத்)
முஸ்லீம் சமய பண்பாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ; சேக் நவவி புத்த சாசன அமைச்சிற்கு கடந்த 08ம் திகதி மாற்றப்பட்டு அங்கு கடமையை பொறுப்பேற்றார். இவ் இடமாற்றத்தை அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி ஐனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்து அந்த இடமாற்றத்தை ரத்துச் செய்துள்ளார். அவரை மீண்டும் முஸ்லீம் சமய பண்பாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையைத் தொடறுமாறு பணித்துள்ளதாக இன்று நடைபெற்ற ஊடகவியாளர் மாநாட்டின்போது சிரேஸ்ட அமைச்சர் பவுசி தெரிவித்தார்.
உம்றா கடமையை நிறைவேற்ற மக்கா செல்வோரும் முஸ்லீம் சமய திணைக்களத்தின் பதிவு செய்தே செல்லல் வேண்டும். இவர்களை கூட்டிச் செல்லும் முகவர்களும் திணைக்களத்தின் பதியப்படல் வேண்டும். இது சம்பந்தமாக அடுத்த வாரம் பத்திரிகையில் விளம்பரப்படுத்த்படும். ஏன சிரேஸ்ட அமைச்சர் பவுசி தெரிவித்தார்.
அடுத்த வருடம் ஹஜ்ஜூக்குச் செல்வோர் ஏற்கனவே முஸ்லீம் சமய திணைக்களத்தில் 6245 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 3500 பேர் இவ்வருடம் சென்றுவிட்டனர். 2013ம் ஆண்டுக்குச் செல்வோர் 3501ம் நம்பர் முதலாம் நம்பரில் இருந்து ஆரம்பமாகும்.
இவ்வருடம் 2800 பேருக்கே ஹஜ் செல்லுவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. எமது செல்வாக்கு மற்றும் சவுதி தூதுவராலயங்கள் ஊடாக மேலும் 500 பேருக்கு விசா கிடைத்தது. இவர்கள் ஹஜ் பயண தங்குமிட கட்டனத்திற்காக முகவர்களுக்கு 4 இலட்சத்து 25 ஆயிரம் ருபாவே மட்டுமே செலுத்த வேண்டும் என சொல்லியிருந்தோம் ஆனால் சில முகவர்கள் 5,6,7 இலட்சமும் அறிவிட்டுள்ளனர். சில பதிவு செய்தவர்கள் அந்தப் பதிவுகளை 50 அல்லது 1 இலட்சம் ருபாவுக்கு விற்றுள்ளனர்.
இவ்வாறு கூடிய பணம் செலுத்தியவர்கள் எழுத்து முலமாக திணைக்களத்திற்கு முறையிட முடியும். இதுவரை எவ்வித முறைப்பாடும் திணைக்களத்திற்கு கிடைக்கவில்லை. என அமைச்சர் பவுசி தெரிவித்தார். அவ்வாறன முகவர்களை இடை நிறுத்த முடியும்.
என சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பவுசி இன்று 14-11-2012 அவரது அமைச்சில் நடைபெற்ற ஊடகவியாலாளர் மாநாட்டின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரபு நாடுகள் நோன்பு காலத்தில் இலவசமாக வழங்கும் ஈத்தம் பழத்திற்கு அரசு வரி அறிவிடுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது வரியல்ல wat & Pal இது அத்தியவசியமாக எந்தப் பொருளையும் இறக்குமதி செய்வதென்றால் இதனைச் செலுத்தியாகவே வேண்டும். இதனை திணைக்களமே செலுத்துகின்றது. இப் பணம் அரசுக்கே செல்கின்றது.
முஸ்லீம் திணைக்களத்தின் கட்டிடத்தை அரசே நிர்மாணிக்கின்றது. இக் கட்டிடத்தை நிர்மாணிக்க எந்தவொரு நாட்டில் இருந்தும் பணம் கிடைக்கவில்லை. திரைசேரி 2011ம் 129 மில்லியன் ருபாவும் 2012 144 மில்லியன் ருபாவும் இம் முறை பஜட்டில் 180 மில்லியன் ருபாவை ஒதுக்கியுள்ளது. ஏன பணிப்பாளர் எம்.வை நவவி தெரிவித்தார்.
அடுத்த வருடம் ஹஜ் கடமை நிறைவேற்றுவருக்கு முகவர்களாக அரசாங்க திணைக்களம் ஊடாக செயற்படுவதற்கு ஏனைய முஸ்லீம் அமைச்சர்களுடனும் கலந்துரையாட உள்ளதாக அமைச்சர் பௌசி தெரிவித்தார்.
WHY NEED REGISTRATION FOR UMMRA, TO GET COMMISSION ON THAT TOO??
ReplyDeleteThis is an idea of making money.
ReplyDeletePlease....... It is now time for repentance. please!!! please!!! stop this money making business in the name of Islam. clock is ticking and the time is running out death may come at anytime.
Please make the path easy for worshipers not as stumbling-block.
May Allah (SWTA)guide our brothers who have sunken in material life.
Abuaymen