அட்டாளைச்சேனையில் சமாதான செயற்பாட்டு குழுவினரின் ஒன்றுகூடல்
(எம்.ஐ.முஹம்மட் பைஷல்)
அட்டாளைச்சேனை ரூவிஷன் ஏற்பாட்டில் இடம்பெற்ற அம்பாறை, மொனராகலை, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சமாதான செயற்பாட்டுக் குழுவினரின் ஒன்று கூடல் அண்மையில் அட்டாளைச்சேனை லொயிட்ஸ் ஹோட்லில் நடைபெற்றது.
அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய அதிபர் கிதுறு முஹம்மட் உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வுக்கு மன்னார் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலிருந்து வருகை தந்த சமாதானக் குழுவினரை வரவேற்று பெச் அணிவித்து கௌரவப்படுத்தினர்.
இந்த நிகழ்வை ஆரம்பிக்குமுகமாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஹாஜா முகைதீன், ரூவிஷன் அமைப்பின் தலைவர் உவைஸ் அப்துல் காதர் ஆகியோர்களினால் குத்து விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தனர்.
இந்நிகழ்வின்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானம் தொடர்பாகவும், மூன்று தசாப்த காலமாக நிலவிய பயங்கரவாதம் முடிவுக்கு வந்து தற்போது நாட்டில் நிலவிவரும் அமைதியான நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள முஸ்லிம், தமிழ் மக்கள் நின்மதியாக வாழ்ந்துகொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஜாதி போதம் மறந்து இன ஐக்கியத்துடன் வாழ்ந்து வரும் மக்களின் உறவுமுறை உண்மையானதாகவும், இந்த உறவுமுறை தொடராக நீடிக்கவேண்டும். இதனை எவ்வாறு வழி நடாத்திச் செல்லல் வேண்டும் என்ற பல கருத்துப் பறிமாற்றங்கள் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பல கல்விமான்களும், ஊடகவியலாளர்களும், மும்மத மார்க்கத் தலைவர்களும் கலந்துகொண்டு தங்களின் பல கருத்துக்களை முன்வைத்து இந்த இன ஐக்கிய உறவுமுறையை நிரந்தரமாக எவ்வாறு முன்னெடுத்துச் செல்லல் வேண்டும். அதற்கு எல்லா இனமும் உள்ளிட்ட புதிய குழுக்களை தெரிவுசெய்து திறன்பட இயக்கம் பெற அதற்கான வழிவகைகளை உண்டுபன்னி வைக்கவேண்டும்.
Post a Comment