Header Ads



'புத்தளத்து மரைக்கார்கள்' ஆக்கம் சம்பந்தமான பதில்..!


கடந்த சில நாட்களாக Jaffna முஸ்லிமில் பதியப்பட்ட 'புத்தள மரைக்கார்மார்' என்ற எனது கட்டுரை சில சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதை அறிந்துகொண்டேன். 

இந்த கட்டுரை யாரையும் அவமானப்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை அது மட்டுமின்றி இது உண்மைக்கு புறம்பான கதையும் அல்ல. புத்தளத்து வரலாறுகளை தேடி ஆராயும் எனது ஆய்வை சிலருடன் பகிருவதற்காக நான் எனது கட்டுரைகளை இணையங்களுக்கு அனுப்பிவருகிறேன்.

இந்த ஆக்கத்தை பயன்படுத்தி எவரும் லாபம் தேடிக்கொள்ள வேண்டாமெனவும், அவமதிப்பு பிரச்சாரங்களில் ஈடுபட வேண்டாமெனவும் கோருகிறேன். புத்தளத்தைச்சேர்ந்த நான் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையிலேயே அந்த ஆக்கத்தை எழுதினேன். அந்த ஆக்கத்தை சிலர் தமது தனிப்பட்ட தேவைக்கருதி பயன்படுத்துவதும், அந்த ஆக்கத்தை பிரசுரித்த jaffna முஸ்லிம் இணையத்தை வம்புக்கு அழைப்பதும் துரதிஷ்டவசமானது.

மரைக்கார் பெயரை சுமந்து கொண்டிருக்கும் எனக்கு மரைக்கார் குடும்ப கௌரவம் குறித்து நன்கு தெரியும். குறித்த விவகாரத்தை குற்றம் சுமத்தும் பார்வையில் நோக்கின் அது குற்றமாகவே தென்படும்.

என்னை ஊக்குவிக்கும் ஓரிரண்டு இணையங்களில் jaffna முஸ்லிம் இணையத்தளம் முதன்மையே. இந்த ஆக்கத்தினால் யாராவது மனம் புண்பட்டிருந்தால் தயவு செய்து என்னை மன்னியுங்கள். நிச்சயம் இதன் பின்னும் நல்ல கருத்துகளோடும் ஆக்கங்களோடும் வருவேன் என உறுதியளிக்கிறேன். 

இஷாம் மரைக்கார்

No comments

Powered by Blogger.