நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை பாராளுமன்றம் கவனத்திற்கொள்ளவில்லை
(இக்பால் அலி)
ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கூட்டத் தொடரில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின் தீர்மானங்களை அமுல் படுத்தக் கோரி சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுத்திருந்தது ஆனால் ஒரு வருடகாலமான போதும் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இது பொருத்தமானதாகப்படவில்லை. ஜனாதிபதி இதனை பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பித்திருந்த போதிலும் பாராளுமன்றம் பெரிதாக கவனத்திற் கொண்டாகத் தெரியவில்லை இந்தப் பரிந்துரைகள் பற்றி பொது மக்களுக்கு பெரியளவில் தெளிவு ஒன்றில்லை. எமது நாட்டின் எதிர் காலத் குறித்து ஜெனீவாப் பரிந்தரைகள் பற்றி சிவில் சமூகத்திற்கு மத்தியில் கொண்டு செல்லப்படவேண்டிய தோவைப்பாடு உள்ளன. என்று மாற்றுக் கொள்கைக்கான நிலையத்தின நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியஜோதி சரவணமுத்து தெரிவித்தார்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் முன் வைக்கப்பட்ட பரிந்துரைகள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கு செயலமர்வு லக்ஷ்மன் விக்கரமசிங்க மண்டபத்தில் 26-11-2012 நடைபெற்றது.
அந்நிகழ்வில் பிரதான வளவாளராகக் கலந்து கொண்ட மாற்றுக் கொள்கைக்கான நிலையத்தின நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியஜோதி சரவணமுத்து அங்கு இவ்வாறு இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
இந்தக் கருத்துப் பரிமாறல்களை வெளியே கொண்டு செல்வதற்கு ஊடகச் சுதந்திரம் ஒன்று இல்லை. சிவில் சமூகத்தின் பிரச்சினை சிவில் சமுகத்திற்கு எடுத்துச் சொல்ல முடியாத நிலை உள்ளது. மனித நேயப் பண்பாட்டை வெகு ஜன ஊடகள் மூலம்தான் முன் வைக்க முடியும். அவ்வாறு இல்லையெனில் வாய் மூலமாக இந்தக் கருத்துகள் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
தற்போது மாகாண சபையின் அதிகாரம் படிப்படியாக செத்துக் கொண்டு போகிறது. 13 ஆவது திருத்தச் சட்ட மூலம ஒழிக்கப்பட வேண்டும் என இலங்கையின் அரசியல் சக்திகள் வலியுறுத்திவருகின்றனர். திவிநெகும சட்டத்தின் மூலம் தகவல் ஒன்றைப் பெற்றுக் கொள்ள முடியாது உள்ளது.
இலங்கையில் நிறைவேற்றப்பட வேண்டிய பரிந்துரைகள் பற்றி இன்று வரை சிங்களம் அல்லது தழிமில் இ;ல்லாத ஒரு நிலை இருக்கிறது. இதனை பாராளுமன்றத்திலிருந்து இலங்கை மத்திய வங்கியிடம் கையளிக்கப்பட்டது மொழிபெயர்ப்பதற்காகும். ஆனால் அங்கிருந்து இன்னும் வரவில்லை.
உண்மை, நீதி நியாயம், மனித உரிமைகளைப் பேணுதல் என்பன இந்நாட்டில் நிலைநாட்டப்படல் வேண்டும். இதற்காக சிவில் சமூகத்தில் கவனத்தை ஈர்க்கக் கூடிய வகையில் இப்பரிந்துரைகள் குறித்து நாடு பூராகவும் விளக்கமளிக்கத் திட்டமிட்டு;ள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் குருநாகல் மாநகர சபை எதர்கட்சித் தலைவர், அளவ்வ மற்றும் மாவத்தகம எதிர்கட்சி உறுப்பினர்கள் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Post a Comment