புத்தளம் காசிமிய்யா அரபு கல்லூரியில் கலந்துரையாடல்
(அபூ நாதில்)
மாற்றுக் கொள்ளைகளுக்கான நிலையத்தினால் கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று மாலை புத்தளம் காசிமிய்யா அரபுக் கல்லூரியில் நடைபெற்றது.
புத்தளம் வன்னி கலாச்சார பவுன்டேஷன் இந்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தது.
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலைய நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, சட்டத்தரணி எஸ். ஜீ. புஞ்சிஹேவா ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். பொது மக்களின் கேள்விகளுக்கு விளக்கங்களும் அளிக்கப்பட்டன.
Post a Comment