தன்மீதான சைபர் போரினால் திக்குமுக்காடும் இஸ்ரேல்
(TU)
காஸ்ஸாவில் இஸ்ரேலின் நரவேட்டையை முடிவுக்கு கொண்டுவர புதிய எதிர்ப்பு போராட்டத்தை துவக்கியுள்ளது சைபர் உலகம். இஸ்ரேல் அரசின் இணையதளங்களை ஹேக் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு சியோனிஸ்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 4 கோடியே 40 லட்சம் இணையதளங்களை ஹேக் செய்யும் முயற்சிகள் நடந்துள்ளதாக இஸ்ரேலிய அரசு அறிவித்துள்ளது.
காஸ்ஸாவில் இஸ்ரேல் தாக்குதலை துவக்கிய புதன்கிழமையே ஹேக்கிங் முயற்சிகள் துவங்கிவிட்டன. ஆனால், இதில் ஒரு ஹேக்கிங் முயற்சி மட்டுமே வெற்றிப்பெற்றுள்ளது என்று இஸ்ரேல் நிதியமைச்சர் யுவல் ஸ்டீனிட்ஸ் கூறியுள்ளார். ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான ஹேக்கிங் முயற்சிகள் நடக்கிறது.
பிரதமர், அதிபர், பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகங்கள் ஆகியவற்றின் இணையதளங்களை ஹேக்கர்கள் குறிவைத்துள்ளனர். உலகின் பல்வேறு பகுதிகளில் ஹேக்கிங் முயற்சிகள் நடந்துவந்தாலும், இதில் பெரும்பாலானவை இஸ்ரேல்-ஃபலஸ்தீன் எல்லைப்பகுதியில் நடப்பதாக நிதியமைச்சக செய்தி தொடர்பாளர் கூறுகிறார்.
நிதியமைச்சகத்தின் கம்ப்யூட்டர் பிரிவு, லட்சக்கணக்கான சைபர் தாக்குதல்களை தடுப்பதற்கான முயற்சியில் இஸ்ரேலிய நிதியமைச்சர் கூறியுள்ளார். அரசு இணையதளங்களை தாக்குவோர் மீது திருப்பி தாக்க தனது அமைச்சகத்திற்கு இஸ்ரேலிய நிதியமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனிடையே, காஸ்ஸாவில் தாக்குதலை குறித்த பிரச்சாரத்தை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. ஃபலஸ்தீன் போராளிகளும், அதற்கு ஆதரவு தெரிவிப்பவர்களும் டிவிட்டரில் தங்களின் எதிர்ப்பை தொடர்ந்துள்ள சூழலில் இந்நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொண்டுள்ளது.
Post a Comment