இஸ்ரேலிய யுத்தமும், நம்மவர்களின் உணர்வுகளும்
(இர்ஷாத் ஷர்கீ)
ஆக்கிரமிப்பு இஸ்ரவேலர்களால் பலஸ்தீன காஸா மண்ணின் மீது சுமாராக கடந்த பத்து நாட்களாக காட்டுமிராண்டித்தனமான முறையில் மேற்கொள்ளப்பட்ட வான்,தரைத்தாகுதல்களுக்கு இலக்காகி பச்சிலம் பாலகர்கள் தொடக்கம் பாயில் படுத்துறங்கியவர்கள் வரை காவுகொள்ளப்பட்டதை நாம் பத்திரிகைகள்,தொலைக்காட்சிகள் ஊடாக அறிந்த விடயம். அறிந்திருந்தும் ஒன்றுமே தெரியாதவர்கள் போல் நாமும் நமது மார்க்க, அரசியல், தலைவர்களும் இருந்ததுதான் ஆச்சரியம்.
யுத்தமென்பதும் உயிர் தியாகம் செய்தல்,உயிர்போன தன் பச்சிலம் பாலகனை இரத்தத்தால் நீராட்டிய நிலையில் தாய் அவள் மடியில் வைத்து அழுவதும் அவர்களுக்கு ஒன்றும் புதுசல்ல எல்லாமே பழகிப்போனவைகள்தான்.
பலஸ்தீன மக்கள் போராடுவது உலகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் சொந்தமான புனித அல் அக்ஸாவை மீட்டெடுப்பதற்காகத்தான் என்பதை எமது உலகம் மறந்து அவர்கள் தாக்கப்படுகின்ற போது நம் ஒட்டு மொத்த ஆதரவை கொடுக்காமல் இருப்பது வேதனை தரும் விடயமாகும்.
நடந்து முடிந்த யுத்த்தில் சுமாராக பச்சிலம் பாலகர்கள் உட்பட135 பேர் ஷஹீதாக்கப்பட்டும்,1000க்கு மேற்பட்டவர்கள் காயங்கலுக்கு உல்லாகி வைத்தியசாலைகளில் இருக்கின்றார்கள். இவ் இஸ்ரேலிய பயங்கரவாத யுத்த காலத்தில் எமது உணர்வுகள் எப்படி இருந்தன என்பதை அலசிப்பார்ப்பது காலத்தின் தேவையாகும்.
இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்த போது எகிப்திய முன்னால் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் முக்கிய உறுப்பினறும்,சர்வதிகாரி ஹுஸ்னி முபார்கின் ஆட்சி வீழ்த்தப்பட்டபின் நடைபெற்ற ஜனநாயக முறையில் மக்களால் தேர்வுசெய்யப்பட்ட ஜனாதிபதி கலாநிதி முஹம்மத் முர்ஸி அவர்கள் ஆற்றிய உரையில் ”இஸ்ரேல் எமது சகோதரர்களுக்கு எதிராக மேற்கொண்டுள்ள யுத்தத்தை கைவிட வேண்டும். தவறும் சந்தர்ப்பத்தில் நாம் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டோம். இன்றய எகிப்தும் அதன் மக்களும் நேற்று இருந்தவர்கள் அல்ல, அவர்கள் மாறி இருக்கின்றார்கள்” என்று குறிப்பிட்டார். மேலும் தன் அரசியல் பிரசாரக்கூட்டங்களில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக காஸாவிற்கும் எகிப்துக்கும் இடையிலான பாதையை நிரந்தரமாக திறந்து வைத்து உபாதைக்கு உள்ளான மக்களுக்கு மறுத்துவ வசதிகளை வழங்கியதோடு காஸாவின் கள நிலவரங்களை நேரில் சென்று பார்வையிட்டு வருவதற்கு தம் நாட்டு பிரதமர் தலைமையில் தூதுக்குழுவினரை அனுப்பி வைத்ததோடு வைத்திய குழுவினர்களையும் காஸாவிற்கு அனுப்பிவைத்தார்.
காட்டுமிரான்டி தாக்குதல் நாட்களை கடந்து செல்லும் போது மெளனிகளாக இருந்த அரேபியர்களின் மௌனங்களை களைப்பதற்காக அரபு லீக் அரபு நாடுகளின் சர்வதேச ஒன்றியம் அதன் பிரதம செயளாலர் நபீல் அவர்களை காஸாவின் நிலவரங்கள் பற்றி கலந்துரையாடுவதற்கும்,அது விடயமாக முடிவுகளை எடுப்பதற்கும் அவசர ஒன்று கூடலை மேற்கொள்ளுமாறு அழைப்புவிடுத்தார். காஸா விடயமாக சர்வதேச அளவில் சர்வதேச நாட்டு ஜனாதிபதிகள் ,பிரதமர்களை தொடர்புகொண்டு கலந்துறையாடல்களை மேற்கொண்டதும் இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்,அத்தோடு அந்நாட்டு மக்களும் இஸ்ரேலியர்களுக்கு எதிராக போராட்டங்களை மேற்கொண்டனர். இப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கான யூதர்களும்,யூத மத போதகர்களும் கலந்து கொண்டது விஷேட அம்சமாகும்.
இஸ்லாமியர்கள் இழந்துள்ள கிலாபத்தை அதன் இறுதி இடத்தில் இருந்து மீட்டெடுப்பதற்காக மீண்டெழுந்துள்ள ரஜப் தையிப் ஏர்துக்கான் தலைமையிலான துருக்கிய அரசாங்கம் காஸாவிற்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலை வன்மையாக கண்டித்ததோடு தாக்குதலை நிறுத்துவதற்கான முழு முயற்சிகளையும் எகிப்திய ஜனாதிபதியோடு சேர்ந்து மேற்கொண்டார். முர்ஸியின் அழைப்பை ஏற்று ஒன்றுகூட்டப்பட்ட அரபு லீக்கின் கூட்டத்தின் பயனாக அதன் 10 உறுப்பு நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்கள் கடந்த 20ம் திகதி காஸாவின் நிலமைகளை கண்டறிவதற்காக சென்றனர்.அக்குழுவினர்களுடன் துருக்கி அதன் வெளிநாட்டு அமைச்சர் அஹமத் டவுக்குவை அனுப்பி வைத்தது. இவ் இரு இஸ்லாமிய நாடுகளையும் தவிர்த்து மற்ற நாடுகள் வாய் மூடி மௌனிகளாக அவர்களின் வழமை போல் இருந்தனர். இருந்த போதும் பஹ்ரைனில் இஸ்ரேலுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றாலும் அப்போராட்டம் தங்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் இருந்தது என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும். அத்தோடு அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் உஸாமா முஹன்னா நாட்டு மக்களினதும் ஆட்சியாளர்களினதும் கவனத்தை திருப்புவதற்காக இஸ்ரேலிய தேசியக்கொடியை பாராளுமன்ரத்துக்குள் வைத்து தீயூட்டியது அவரின் இஸ்லாமிய சகோதரத்துவத்தின் வெளிப்பாடு என்று எம்மால் கருத முடியும்.
இலங்கை,இந்திய,வங்காளதேச முஸ்லிம் மக்களின் இஸ்லாமிய சகோதரத்துவ பாசத்தையும்,உணர்வுகளையும் பார்க்கும் போது அவர்களுக்கு சகோதரத்துவ உணர்வு இல்லையா என்று என்னத்தோன்றுகின்றது.அன்மயில் நடிகர் விஜய் நடித்து வெளியாகிய துப்பாக்கிப்படத்தில் முஸ்லிம்கள் தீவிர வாதிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளார்கள் என்று பல இஸ்லாமிய அமைப்புக்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு அதில் வெற்றி அடைந்த சந்தர்ப்பத்தில் காஸா விடயமாக ஏன் மௌனிகளானார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது. இருந்த போதும் இஸ்ரேலிய தாக்குதல் முடிவுக்கு வந்த பின்னர் காலம் கடந்து கடந்த 21ம் திகதி டில்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு முன்னால் சுமார் 6 இஸ்லாமிய அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
பொதுவாக நம் நாட்டு மார்க்க அறிஞர்கள்,அரசியல் வாதிகள்,மற்றும் அனைத்து அமைப்புக்களும் வலு இழந்த நிலையினையே சென்ற காலங்களில் எம்மால் கான முடிந்தது.இருந்த போதும் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுந்த மனித உரிமை மீறல் அறிக்கைக்கும்,அமெரிக்காவுக்கும் எதிராக திறண்டெழுந்த எம் மக்கள், தம்புள்ளை ஹைரியா பள்ளிவாயல் விடயத்தில் ஒற்றுமைப்பட்ட நமது அரசியல் தலைமைகள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள்,புத்துனர்ச்சி பெற்ற அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை,ஊடகத்துறையில் மாத்திரம் தங்கள் கவனங்களை திருப்பிக்கொண்டிருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் போன்ற அனைத்து அமைப்புகளும் உத்வேகம் அடைந்த போது இலங்கை முஸ்லிம்களும் உணர்வு பெற்று விட்டார்கள்,எம் சமூகத்திற்கு விமோசம் கிடைத்து விட்டது என்று என்னத்தோன்றியது.
ஆனால் காஸாமீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிராக இலங்கையிலும் சில வேடிக்கையான நிகழ்வுகளும் இடம்பெறத்தான் செய்தன.வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அ.இ.ஜ.உ சபை ஜனாதிபதி கஸகஸ்தான் சென்ற பிறகு இஸ்ரேலின் காஸா மீதான தாக்குதலை கண்டித்து ஜனாதிபதி அறிக்கை விடவேண்டும் என கேட்டுக்கொண்டது,இவ் அமைப்பின் அறிக்கையில் வழமைபோன்று சகல முஸ்லிம்களும் தங்கள் தொழுகைகளில் காஸா மக்களுக்காக பிரார்தனை செய்யுங்கள். இக் கட்டுரை ஊடாக நான் அவர்களிடத்தில் கேட்பது துஆ மாத்திரம் போதுமாக இருந்திருந்தால் நபி(ஸல்) அவர்கள் எதற்காக யுத்தம் செய்தார்கள்,ஸஹாபாக்கள் ஷஹீதாக்கப்பட்டார்கள் நபி(ஸல்) அவர்கள் துஆ மாத்திரம் செய்து இருந்திருக்கலாம் அல்லாவா. இலங்கையில் வாழ்கிண்ற இஸ்லாமிர்களுக்கு,அவர்களின் வணக்க இல்லங்களுக்கு ஏதாவது நிகழுமானால் அதனை கண்டிப்பதிலும்,அச்செயலை பத்திரிகைகளில் தெளிவுபடுத்துவதிலும்,மக்களை இணைத்து ஆர்ப்பாட்டங்களில் குதிப்பதிலும் மேல் மாகாண ஐக்கிய தேசிய கட்சியின் குறிப்பிட்ட உறுப்பினர் மிகவும் உணர்வு பூர்வமாக இருப்பவர்கூட எந்த ஒரு ஆக்க பூர்வமான செயட்பாட்டில் இறங்காமல் இருந்தமை அவர் மேற்கொள்ளும் உணர்வு பூர்வ செயற்பாடுகள் தன் அரசியல் வாழ்கையை தக்க வைத்துக் கொள்வதற்காகவா மேற்கொள்கின்றார் என என்னத் தோன்றுகின்றது.
இவர் மாத்திரம் அல்லாது மார்க அறிஞரும்,அரசியல் கட்சியின் தலைவரும் அரசியல்,சமூகம் சார்த விடயங்ளில் அடிக்கடி அறிக்கைகள் விடுபவர்கூட இவ் இஸ்ரேலிய தாக்குதலை கண்டித்து அறிக்கை விடாமல் இருந்த்தும்,ஆக்க பூர்வமான செயற்பாடுகளிள் ஈடுபடாமல் இருந்ததும் அதிசயத்தக்க விடயமாகும். அத்தோடு இஸ்லாமிய உணர்வுகளை பற்றி அரசியல் மேடைகளில் கூக்குரலிட்டு திரியும் அரசியல் தலைமைகள் கூட ஒரு கண்டன அறிக்கை விடவோ,முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து பாராளுமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக கண்டனத்தை கொண்டு வந்ததையோ காண முடியவில்லை.அதே போன்றே கிழக்கு மாகான சபையில் பெரும்பான்மையாக இருக்கும் முஸ்லிம் உறுப்பினர்களும் காணப்பட்டனர்.
இருந்த போதும் சில இஸ்லாமிய உணர்வுள்ள இயக்கங்கள் தங்கள் கண்டனப்பிரகடனத்தை மேரற்கொண்டனர். கடந்த 20ம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தங்கள் அமைப்பு சார்பாகவும்,22 ம் திகதி தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய மாணவர்கள் ஒன்றியமும், தென்கிழக்குப்பல்கலைக்கழக அனைத்து மாணவர்கள் ஒன்றியமும் இணைந்து பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் ஆர்பாட்டம் ஒன்றை மோற்கொண்டனர். அதே போன்று அதிகமான முகப்புத்தக பாவனையாளர்கள் இஸ்ரேலின் உற்பத்திப்பொருட்களுக்கு எதிராக தங்கள் யுத்ததை மோற்கொண்டதை காணக் கூடியதாக இருந்தது. வாழையடி வாழையாக இலங்கை முஸ்லிம்களால் புனித ஜும்மா தொழுகைக்கு திரலும் மக்களை ஒன்று சேர்த்து மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை போல் யுத்தம் சமாதானத்திக்கு வந்து இரண்டு நாட்கள் கடந்த பின்னர் இன்று 22ம் திகதி நாடு தழுவிய ரீதியில் இஸ்ரேலுக்கு எதிராக கண்டன ஆர்பாட்டங்கள் நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.
ஆனால் எம் காஸா சொந்தங்கள் எம்மிடத்தில் கேட்டதெல்லம் பொருளாதார,உணவு போன்ற உதவிகள் அல்ல ஆனால் அவர்கள் கேட்டது அரசியல் ரீதியாக அக்கிரம இஸ்ரேலுக்கு எதிரான ஆதரவே. எமது சமூகம் எப்போது விழித்தெளும்.
Post a Comment