பாகிஸ்தானும், இந்தியாவும் பசி கொடுமைக்கு எதிராக போராட வேண்டும்
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் முதல் முறையாக பாகிஸ்தான் சென்றுள்ளார். அங்கு லாகூர் அரசு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
இங்குள்ள மக்கள் என் மீது வைத்துள்ள அன்பு செயற்கையானதாக இருக்க முடியாது. லாகூரில் இருந்தாலும், அயல்நாட்டில் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
இதற்கு முன்னர் இருநாட்டு பாராளுமன்ற பிரதிநிதிகள் மட்டுமே தேசிய தலைநகரங்களில் வந்து பேசியது நல்ல ஆரம்பம்தான். அதே வரலாற்றை நாமும் முன்னெடுத்துச் செல்வது அவசியம். ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதற்குப் பதிலாக, பசி மற்றும் வறுமைக்கு எதிராக நாம் இணைந்து போராட வேண்டும்.
பீகார் மாநிலத்தில் எனது ஆட்சியில் சட்டம் ஒழுங்கு, கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது மட்டுமே எங்கள் நோக்கம் அல்ல. இலவச சைக்கிள் மற்றும் கல்வி உதவி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை காரணமாக 2005-ம் ஆண்டு 12.5 சதவீதமாக இருந்த கல்வி இடைநிற்றல் விகிதம் 2 சதவீதமாக குறைந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
Post a Comment