Header Ads



பதற்றம் ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்


தமிழகத்தில் ஹிந்து - முஸ்லிம் மக்களுக்கிடையே  பதற்றத்தை ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

தவ்ஹீத் ஜமாத் மாநிலச் செயலாளர் அப்துல் ரஹீம் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆர் எஸ் எஸ் பிரமுகர் ஆனந்தன் என்பவர் சில மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் அரசு பேருந்துக்கு சிலர் தீ வைத்தனர்.

மேலும் கோவை செல்வபுரத்தில் உள்ள இரு சக்கர வாகனக் கடைக்கு சனிக்கிழமை அதிகாலை மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த இரு சம்பவங்களிலும் ஈடுபட்டபவர்கள் மீது காவல்துறையினர் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இச் சம்பவங்களை வைத்து ஹிந்து - முஸ்லிம் மக்களிடையே மோதலை ஏற்படுத்திடும் வகையில் சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.  கோவை மாவட்டத்தில் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வரும் இரு தரப்பினரிடம் மோதலை உருவாக்கும் வகையில் பொய்ப் பிரசாரங்கள், அறிக்கைகளை சில அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்டு வருகின்றனர். பண்டிகைக் காலம் என்பதால் பொது இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுகின்றனர். வதந்தியை பரப்புவதன் மூலம் அசம்பாவித சம்பவம் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே, வதந்தியை பரப்புபவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறு தவ்ஹீது ஜமாத் மாநிலச் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார். inneram

No comments

Powered by Blogger.