காத்தான்குடியிலுள்ள பொறுப்பு வாய்ந்தவர்கள் மனசு வைத்தால்..! (படங்கள் இணைப்பு)
(மொஹமட் சப்ரி)
காத்தான்குடி பிரதேசத்தில் சேரும் குப்பைகளை காத்தான்குடி நகர சபையினால் கடற்கரைக்கு அருகில், நீர் உள்ள பள்ளத்தாக்கில் கொட்டப்படுகின்றது.
இது மழைக்காலம் ஆகையால் தேங்கி நிற்கும் நீருக்குள் குப்பை கொட்டப்படுவதனால் டெங்கு மலேரியா போன்ற கொடிய நோய்க் காரணிகள் பெருகுவதோடு வாந்திபேதி , கொலரா போன்ற நோய்களும் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது இதனை சூழவுள்ள பகுதிகளில் துர்நாற்றம் வீசுகின்றது இது கடற்கரை பிரதேசமாகையால் இங்கு இளைப்பார வரும் மக்களும் கடும் அசௌகரியங்களுக்கு ஆளாகின்றனர் இதனை சுற்றி ஒரு பாடசாலையும் இரண்டு பள்ளிவாயல்களும் உள்ளது.
இதனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்தும் எந்த பலனும் இல்லை . இதே தவறை சாதாரண பொது மகன் செய்யும் பட்சத்தில் பிரதேச சபையால் , பொலிசாரினால் , பொது சுகாதார உத்தி யோகத்தர்களால் , வழக்குகள் எழுதப்பட்டு தண்டப்பணம் அறவிடுகின்றனர்.
பிரதேச வைத்திய அதிகாரி அவர்களே, சுகாதார பரிசோதகர்களே , மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாருக் அவர்களே, காத்தான்குடி போலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களே , இது உங்களின் கவனத்திற்கு..!
அன்புள்ள இஸ்லாமிய சகோதரர்களுக்கு
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
சுத்தம் ஈமானில் பாதி .குறுகிய நிலப்பரப்பில் அதிக மக்கள் வாழும் பகுதி காத்தான்குடியாகும் .
எனவே இந்தப்பிரதேசத்தில் இவ்வாறு சுனாமி அலைகள் போன்று குப்பைகள் காணப்பட்டால்
இந்த மக்களின் நிலைமை என்ன ?
அவர்கள் எங்கேதான் குப்பை கொட்டுவார்கள்? ஊடகங்களின் கடமை எதுவும் செய்யமுடியாத நிலையில் உள்ள அந்த சமூகத்தின் பொறுப்புதாரிகளிடம் முறையிடுவதல்ல!!! இப்படி ஒரு அவலத்தை தெறிந்தோ தெறியாமலோ இருந்தும் எந்த வித தீர்வையும் தங்களின் அதிகாரங்களை பயண்படுத்தி வழங்கமுடியுமாக இருக்கும் நாட்டின் ஜநாதிபதி தொடக்கம் அதிகாக மேல்மட்டதிட்கும் மனிதர்களின் ஆரோக்கிய வாழ்வுக்கு தொண்டுசெய்யும் உலக அமைப்புகளிடமுமே
ReplyDelete