Header Ads



கல்முனை பிரதேசத்தில் நடமாடும் சேவை (படங்கள் இணைப்பு)

(சௌஜீர் ஏ முகைடீன்)

தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காட்சி எதிர்வரும் 2013ம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் நடமாடும் சேவை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் த அல்விஸ் தலைமையில் நடைபெற்று வருகின்றது. 

இந்நடமாடும் சேவையின் மூலம் மக்களின் சகலவிதமான அரச திணைக்களங்கள் சார்பான தேவைப்பாடுகள் பூர்த்தி செய்து வைக்கப்படுகின்றன. அந்தவகையில் கல்முனை பிரதேச செயலகங்கள் இணைந்து ஏற்பாடு செய்த கல்முனை பிரதேச நடமாடும் சேவை இன்று (2012.11.02) கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலையில் நடைபெற்றது. 

ஜனாதிபதி செயலக அதிகாரிகள் உட்பட மாவட்ட செயலக, சமூகசேவை, குடிவரவு குடியகழ்வு, ஆட்பதிவு, மோட்டார் போக்குவரத்து, பொலிஸ், இராணுவம், சுகாதாரம், நீர் வழங்கல், மின்சாரம், விவசாயம், மீன்பிடி போன்ற 32 அரச திணைக்களங்களின் அதிகாரிகள் தங்களின் சேவையினை  மக்களுக்கு வழங்கிவைத்தனர்.

இதன்போது சமுர்த்தி அதிகார சபையினால் ஒன்பது சமுர்த்தி பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்காகவும் சுயதொழில் வாய்ப்பிற்காகவும் கடனாக தலா ஒரு இலட்சம் ரூபாவுக்கான  காசோலை வழங்கப்பட்டது. அத்தோடு கண்பார்வை இழந்தவர்களுக்கு மூக்குக் கண்ணாடி மற்றும் எட்டு ஊனமுற்றோருக்கான இரண்டு சக்கர நாட்காலி என்பனவும் இலவசமாக வழங்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.  










No comments

Powered by Blogger.