காலி மல்ஹருஸ்ஸூல்லியா மத்திய கல்லூரி பரிசளிப்பு விழா (படங்கள்)
காலி, மல்ஹருஸ்ஸூல்லியா மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யின் வருடாந்த பரிசளிப்பு விழா அதிபர் ஐ.எம்.எம். யூசுப் தலைமையில் நடைபெற்ற பொழுது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி, பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணாயக்கார, முன்னாள் காலி நகர பிதா பவுஸ் நியாஸ், மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம்.எம். நிலாம் ஆகியோர் கௌரவ அதிதிகளாக பங்குபற்றினர்.
விஷேட அதிதிகளாக கராபிட்டி போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த கல்லூரியின் பழைய மாணவர் டாக்டர் பத்ஹூர் ரஹ்மான், நிதி திட்டமிடல் அமைச்சின் பணிப்பாளர் கல்லூரியின் பழைய மாணவி நூர் ரிஸ்னா அனீஸ், வலயக் கல்வி பணிப்பாளர் சுசில் பிரேம்னாத், முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும், முன்னாள் காலி மாநகர சபை உறுப்பினருமான பழைய மாணவர் ஹஸன் ஷரீப், காலி வலய மேலதிக உதவிக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க், எம்.ஐ.எம். பாருக் முதலானோரும் கலந்து கொண்டனர்.
தென் இலங்கையில் 97 வருடங்களாக இயங்கி வரும் பிரபல்யமான இக் கல்லூரியில் இருபது ஆண்டுகளின் பின்னர் இப் பரிசளிப்பு விழா நடைபெறுவது சிறப்பான அம்சமென்றும் முன்னாள் பிரதி சபாநாயகர் ஐ.ஏ. காதர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஏ.டபிள்யு.எம். ஸலாம் ஆகியோர் இக் கல்லூரியின் பழைய மாணவர் என்பது பெருமைக்குரியதென்றும், இக் கல்லூரி சிங்களம், தமிழ் ஆகிய மொழி மூலமான வகுப்புகளை நடத்தி வருவது சிறந்த முன்மாதிரியென்றும் சிலாகித்துப் பேசிய பிரதம அதிதி ஹக்கீம் அமைச்சர் ஹக்கீம் தென் இலங்கையில் முஸ்லிம்களின் கல்வி நிலையில் காணப்படும் தேக்க நிலையை போக்குவதற்கு இப் பகுதி அரசியல்வாதிகளுடன் இணைந்து தாமும் ஒத்துழைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
Really I'm very very very proud about my school....
ReplyDeleteI Love You Malharus Sulhiya..... You are my second home......!
I spend lot of time on you seconded to my home.