நாட்டில் பெய்த சிவப்பு மழைக்கும், வேற்று கிரக வாசிகளுக்கும் தொடர்பா...??
கடந்த தினங்களில் நாட்டின் சில பகுதிகளில் பெய்த சிவப்பு மழைக்கும், வேற்று கிரகவாசிகளுக்கும் இடையில் தொடர்புகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரக மண்டல ஆய்வாளர் பேராசிரியர் ச்சந்தன ஜயரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு இவ்வாறான சிவப்பு மழை புதிது எனினும், ஏனைய நாடுகளில் இவ்வாறான சிவப்பு நிற மழை வீழ்ச்சி பல்வேறு சந்தர்ப்பங்களில் பெய்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கடலில் இருந்து மேகத்துக்கு நீர் உறுஞ்சப்படும் போது, சில சமயங்களில் கடிலில் காணப்படுகின்ற அரிதான சிவப்பு நிற மாற்றங்களும் சேர்த்து உறுஞ்சப்படலாம். இதன் விளைவாகவே இந்த மழைவீழ்ச்சி ஏற்பட்டிருக்கலாம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். sfm
Post a Comment