எமது வீரர்கள் சட்டவிரோத குடியேற்றவாசிகள் அல்ல - அவுஸ்திரேலியாவுக்கு நெத்தியடி
அவுஸ்ரேலியா அறிமுகப்படுத்தியுள்ள புதிய நுழைவிசைவு நடைமுறை தொடர்பாக இலங்கை கிரிக்கெட் துடுப்பாட்ட வீரர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். கொழும்பிலுள்ள அவுஸ்ரேலியத் தூதரகம் நுழைவிசைவு நடைமுறைகளை அண்மையில் இறுக்கமாக்கியுள்ளது.
இதனால், அவுஸ்ரேலியாவுக்கு வரும் டிசம்பர் 2ம் நாள் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த இலங்கை துடுப்பாட்ட அணி குறித்த நாளில் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
புதிய நுழைவிசைவு விதிகளின்படி,இலங்கை அணியில் உள்ள அனைத்து வீர்ர்களையும் கைவிரல் அடையாளத்தைப் பதிவு செய்வதற்காக யூனியன் பிளேசில் உள்ள தமது நுழைவிசைவு பணியகத்துக்கு நேரில் வருமாறு அவுஸ்ரேலிய தூதரகம் அறிவித்துள்ளது. இது இலங்கை அணி வீரர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
எனினும் வேறு வழியில்லை என்றும், ஆனால், அவர்கள் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் இலங்கை துடுப்பாட்டச்சபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தமது துடுப்பாட்ட வீர்ர்களை சட்டவிரோத குடியேற்றவாசிகளைப் போல அவுஸ்ரேலியா நடத்தக்கூடாது என்றும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.
எமது வீர்ர்கள் இதனால், புண்பட்டுள்ள போதிலும், துரதிஸ்டவசமாக அவர்களின் விதிமுறைகளுக்கு அமைய விளையாட வேண்டியுள்ளது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Post a Comment