அறிவில் கூர்மையடைய விரும்புகிறீர்களா..?
உணவே மருந்து என்ற காலம் மாறி தற்போது மருந்தே உணவு என மாறிவிட்டது. இதற்கு பீசா, பர்க்கர், நூடுல்ஸ் போன்ற நவீன உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சி இன்மையே காரணம். காய்கறிகளை, சாப்பிடும் பழக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இவற்றின் முக்கியத்துவம் பலருக்கு தெரிவதில்லை. பழங்கள், காய்கறிகள் உடல் நலம் காக்கும் உணவுகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றை சாப்பிடுவதால் உடல் நலம் சீராக்கப்பட்டு, நோய்களின் தாக்கம் குறைகிறது. உடலின் பல்வேறு இயக்கங்களை ஒழுங்குபடுத்துவதோடு தேவையான ஊட்டச்சத்துக்களையும் தருகிறது. இயற்கையாகவே பல காய்கறிகள் குறைந்த கொழுப்பும், கலோரியும் கொண்டவை.
நன்மைகள்
* இதயம் சார்ந்த நோய்கள் குறைக்கிறது.
* சிலவகை புற்றுநோய்களை கட்டுப்படுத்துகிறது
* உடற்பருமனை குறைக்கிறது
* பொட்டாசியம், போலிக் அமிலம் வைட்டமின் ஏ.சி., போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் காய்களில் தான் உள்ளன.
* பொட்டாசியம் இரத்தம் அழுத்தம், சீறுநீரக கற்கள், எலும்பு தேய்மானம் போன்றவற்றை கட்டுப்படுத்துகிறது.
* போலிக் அமிலம் ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கிறது
* வைட்டமின் ஏ கண்கள், தோல்கள் ஆரோக்கியமாக இருக்கவும், நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கவும் பயன்படுகிறது
* வைட்டமின் சி பற்கள் சார்ந்த நோய்களை நீக்குவதோடு. நோய் எதிர்ப்பு திறனையும் அதிகரிக்கிறது.
காய்கறிகளில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மருத்துவ குணம் உண்டு. இதை கண்டறிந்து உண்டால் மருத்துவரிடம் செல்லும் தேவை இருக்காது. காய்கறிகள் உட்கொள்பவர்களுக்கு அறிவு கூர்மை அதிகம் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பழங்கள் காய்கறிகளை உண்பவர்களுக்கு உடற்பருமன் நோயும் ஏற்படுவதில்லை. சரிவிகித உணவு என்பது அனைத்து காய்கறிகளையும் சரிவிகித சுழற்சி முறையில் உட்கொள்வது தான்.
உடற்பயிற்சி நன்மைகள்: ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி அவசியம். நம்மில் பெரும்பாலானோர் உடற்பயிற்சியை மறந்து, மருந்து, மாத்திரைகளில் வாழ்கிறோம். நேரமின்மை. இயந்திர வாழ்க்கை வாழ்வதே இதற்கு முக்கிய காரணம். தினம் உடற்பயிற்சி செய்வதால் உடல்நலம் காக்கப்படுவதோடு சுறுசுறுப்பாக செயல்பட முடியும்.
நீண்ட ஆயுள்
* தன்னம்பிக்கை அதிகரித்தல்
* நல்ல தூக்கம்
* சுறுசுறுப்பாக செயல்படுதல்
* வலுவான தசை, எலும்பு உருவாகுதல்
* உயரத்திற்கு ஏற்ற எடையை பெறுதல்
* எப்போதும் சந்தோஷமாக இருத்தல்
* மன அழுத்தம் குறைதல்
Post a Comment