Header Ads



புத்தளம் காசிமிய்யா அரபுக் கல்லூரியில் புதிய மாணவருக்கான அனுமதி


(அபூ முஸ்னா)

புத்தளம் காசிமிய்யா அரபுக் கல்லூரிக்கு 2013 ம் கல்வி ஆண்டுக்கான புதிய மாணவர்கள் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இக்கல்லூரியில் ஹிப்ழு பிரிவுக்கான மாணவர்கள் ரூரூரூம் ஆண்டு 6ம் வகுப்பில் பாடசாலைக் கல்வியைக் கற்கக் கூடியவராகவும், அல்குர்ஆனைப் பார்த்து திருத்தமாக ஓதக்கூடியவராகவும், நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவராகவும் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவில் சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்கள் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியில் கல்வியைத் தொடர முடியும்.

ஷரீஆப் பிரிவுக்கான மாணவர்கள் 2013ம் வருடம் பாடசாலைக் கல்வியில் 9ம் அல்லது 10 வகுப்பில் கல்வி கற்கக் கூடியவராகவும், அல்குர்ஆனை திருத்தமாக ஓதக்கூடியவராகவும், நல்ல உடல் ஆரோக்கியம் உடையவராகவும் இருத்தல் வேண்டும். இப்பிரிவில் சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்கள் க. பொ. த சாதாரண தரம் மற்றும் உயர் தரக் கல்வியையும், கணினி அறிவையும் மதரசாவிலேயே கற்று அரச பரீட்சைகளுக்குத் தோற்ற முடியும். 

விண்ணப்பிக்க விரும்புவோர் சுயமாக விண்ணப்பங்களை தயாரித்து தமது முழு விபரங்களுடன் இம்மாதம் 30ம் திகதிக்கும் முன்னர் கிடைக்கக் கூடியவாறு அதிபர், காசிமிய்யா அரபுக் கல்லூரி, மன்னார் வீதி புத்தளம் எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கல்லூரி நிருவாகம் கேட்டுள்ளது

No comments

Powered by Blogger.