நவவியின் இடமாற்றத்திற்கு முன்னாள் முஸ்லிம் அமைச்சர்களே காரணம்..!
முஸ்லிம் சமய தகவல் கலாசார திணைக்கள பணிப்பாளர் Y.L.M. நவவி அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதுதொடர்பில் யாழ் முஸ்லிம் இணையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவல்கள் வருமாறு,
முன்னயை காலங்களில் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 2 முஸ்லிம் அமைச்சர்களே நவவியின் அரசியல் பழிவாங்கலுக்கு காரணமாக அமைந்துள்ளனர். குறித்த இரு முன்னாள் முஸ்லிம் அமைச்சர்களின் விருப்பத்திற்கு இணங்க நவவி மறுத்தமையை அடுத்து அவர் இடமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் நேரடி தலையீடு நவவியின் இடமாற்ற பின்னணியில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை இவ்விவகாரம் தொடர்பில் நாம் நவவியை தொடர்புகொண்டு மேலதிக தகவல்கள் பெற முயன்றபோதும் எம்மால் நவவியுடன் பேசிமுடியவில்லை.
Post a Comment