வெற்றி கிட்டும்வரை போராட்டம் தொடரும் - ஹமாஸ் சூளுரைப்பு
ஹமாஸ் இயக்கத்தின் தலைமையக கட்டிடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தம்மை மேலும் பலமடையச் செய்துள்ளதாக பலஸ்தீன பிரதமர் இஸ்மாயில் ஹனியா தெரிவித்துள்ளார்.
“ இவ்வாறான தாக்குதல்கள் எம்மைப் பலவீனப்படுத்தும் என சியோனிஸவாதிகள் நம்புகிறார்கள். ஆனால் உண்மை அப்படியல்ல. இதன் மூலம் நாம் மேலும் பலப்படுகிறோம். பலஸ்தீனை விடுவிக்க வேண்டும் எனும் எமது சுதந்திர தாகத்தை இத் தாக்குதல்களும் இழப்புகளும் மேலும் அதிகரிக்கின்றன. எமக்கு வெற்றி கிட்டும் வரை போராட்டம் தொடரும்” எனவும் அவர் தனது டுவிட்டர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை ஹமாஸ் தலைமையக கட்டிடங்கள் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் மூன்று ஹமாஸ் போராளிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment