எகிப்தில் ஷரீஆ சட்டத்தை விரும்பும் கிறிஸ்தவர்கள் - இஹ்வான், சலபி மோதல் வலுக்கிறது
(தூது)
முபாரக்கின் வீழ்ச்சிக்குப் பிறகு ஆட்சியை பிடித்துள்ள முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் சாசன உருவாக்க குழு மிகுந்த சர்ச்சைகளை சந்திக்கிறது. காப்டிக் கிறிஸ்தவர்களும், தங்களுக்கு ஷரீஅத் சட்டமே போதும் என்று மனு அளித்துள்ளது விவாதத்தை கிளப்பியுள்ளது. காப்டிக் கிறிஸ்தவர்களுக்கு விவாகரத்து என்பது அவர்களது மத சட்டத்தின்படி மிகவும் சிரமமாக இருப்பதால் அவர்கள் ஷரீஅத் சட்டத்தை நாடுவதாக காப்டிக் சபையின் அதிகாரப்பூர்வ பிரிவினர் கூறுகின்றனர்.
முபாரக் ஆட்சியில் ஷரீஅத் சட்டங்கள் தாம் அரசியல் சாசனத்தின் முக்கிய அடிப்படையாக அமையவேண்டும் என்பது எழுதப்பட்டிருந்தது. ஆனால், அது ஏட்டளவில் மட்டுமே ஒரு அறிக்கையாக அமைந்தது என்று இஸ்லாமியவாதிகள் கூறுகின்றனர். அதற்கு பதிலாக ஷரீஅத் சட்டம் தான் தேவை என்பது அவர்களது வாதமாகும். இஸ்லாமியவாதிகளிலேயே ஸலஃபிகளுக்கும், இஃவான்களுக்கும் இடையேயும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்திற்கு ஷரீஆ சட்டத்தின் வரைவிலக்கணம் வகுக்கும் அதிகாரத்தை வழங்குமாறு ஸலஃபிகள் கூறுகின்றனர்.
ஒரு காலத்தில் முபாரக்கின் ஆட்சியின் கீழ் சர்வாதிகார முபாரக்கின் ஃபத்வாக்களின் கீழ் கையெழுத்திட்டு வந்த அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்திற்கு அத்தகையதொரு அதிகாரத்தை வழங்குவது அபாயகரமானது என்று இஃவான்களும், இதர மதசார்பற்ற வாதிகளும் கூறுகின்றனர். ஆனால், அல் அஸ்ஹர் பல்கலைக்கழகமோ ஸலஃபி கொள்கையை எதிர்க்கிறது. நீதிமன்றங்கள் தாம் சட்டத்திற்கு வரைவிலக்கணம் வகுக்கவேண்டும் என்பது அவர்களின் வாதமாகும்.
தண்டனைச் சட்டங்களே அமல்படுத்தும் சூழல் உருவாகவில்லை என்பது இஃவான்களின் கருத்து. முன்பு அரசியலில் இறங்குவதை மறுத்துவந்த ஸலஃபிகள் தற்பொழுது எகிப்து போன்ற நாடுகளில் ஆதரிக்கின்றனர். அதேவேளையில் சூடானில் உமருல் பஷீருக்கு எதிராக ஆயுதப்போராட்டத்தை நடத்துவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர்.
Obama says to mitt; he shoots first and aim later!!
ReplyDeleteSame fitting some of so-called 'daa'ees, when do 'things', where ever...there are..