Header Ads



அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார்..? ஒபாமாவை விரும்பும் முஸ்லிம்கள்..!




உலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை (6-ந்தேதி) நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஒபாமாவும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் கவர்னர் மிட் ரோம்னியும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள முஸ்லிம்களில் அதிகமானவர்களின் ஆதரவு ஒபாமாவுக்கு கிடைககுமெனவும், ஒபாமா சிரிய நாட்டு விவகாரத்தில் கூடிய ஆர்வம் செலுத்த வேண்டுமென அங்குள்ள முஸ்லிம்கள் விரும்புவதாகவும் ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

தேர்தலுக்கு இன்னும் ஒரு நாளே உள்ளது. இந்த நிலையில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் ஒபாமாவுக்கு 48 சதவீதமும், மிட்ரோம்னிக்கு 47 சதவீதமும் ஆதரவு இருப்பது தெரிய வந்தது. 1 சதவீதம் வாக்குகளே ஒபாமாவுக்கு கூடுதலாக உள்ளது. கடைசி நேரத்தில் இதுவும் மாறி இருவருக்கும் சம வாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகும் என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

எனவே யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதில் இவர்கள் இருவருக்கும் இடையே கடும் இழுபறி நீடிக்கிறது. அமெரிக்காவில் அதிபராகும் ஒருவர் மக்கள் செல்வாக்கை பெற்றால் மட்டும் போதாது. ஒவ்வொரு மாகாணத்திலும் அதிபரை தேர்ந்தெடுக்க ஒரு சபை உள்ளது. அதன் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஓட்டுக்களையும் பெற வேண்டும். இதுபோன்ற அதிபரை தேர்வு செய்யும் அவையில் 538 உறுப்பினர்கள் உள்ளனர்.

அவர்களில் 270 பேரின் ஓட்டுகளையும் பெற வேண்டும். அவர்களின் மெஜாரிட்டி ஓட்டுகளை பெறுபவர்தான் அதிபராக முடியும். கடந்த 2000-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட அல்கோர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்சை விட கூடுத லாக மக்கள் ஓட்டு பெற்று இருந்தார்.

ஆனால் புளோரியா மாகாணத்தில் அதிபரை தேர்வு செய்யும் சபை உறுப்பினர்களிடம் குறைவான வாக்குகளை பெற்றார். அதனால் ஜார்ஜ் டபிள்யூ புஷ் வெற்றி பெற்றதாக சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. அதிபர் யார் என்பதை அறிவிப்பதில் கால தாமதமும் ஏற்பட்டது.

தற்போதைய நிலவரப்படி மக்களிடம் நடந்த கருத்து வாக்கெடுப்பில் ஒபாமா பல மாநிலங்களில் முன்னணியில் உள்ளார். ஆனால் ஒகியோவில் அதிபரை தேர்ந்தெடுக்கும் சபை உறுப்பினர்களின் வாக்குகளை பெறுவதில் அவருக்கு இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலை நீடித்தால் அதிபர் தேர்தல் முடிவு அறிவிப்பதில் காலதாம தமாகும்.

மேலும் தேர்தல் முடிவை தேர்தல் கமிஷனுக்கு பதிலாக சுப்ரீம் கோர்ட்டு அறிவிக்க கூடிய சூழ்நிலை உருவாகும். 

1 comment:

  1. யார் வென்றல்தான் என்ன !!!! இவர்களில் எவரும் முஸ்லீம் உம்மாவுக்கு கரிசனை காட்டமாட்டார்கள் இன்னும் குழி தோண்டதான் முயல்வார்கள் இதுதான் உண்மை. கடந்த கால அமெரிக்க தலைமைகளின் நடவடிக்கைகளை நோக்கினால் உண்மை விளங்கும்.....

    ReplyDelete

Powered by Blogger.