Header Ads



சிரியாவில் மற்றுமொரு நகரை கைப்பற்றியுள்ள கிளர்ச்சியாளர்கள்


சிரியாவில், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த நகரை, கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.சிரியாவில், அதிபர் பஷர் அல் ஆசாத்தை, பதவி விலகும்படி கோரி, 20 மாதங்களாக கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பதவி விலக மறுக்கும் ஆசாத் அரசு, கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதலை நடத்தி வருகிறது.ஆசாத் பதவி விலக, அமெரிக்கா கோரியது. இதற்கு, ஆசாத் மறுத்ததால், கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆயுத உதவி அளித்து வருகிறது. 

இதனால், சிரியாவில் தொடர்ந்து சண்டை நடக்கிறது. இது வரை, 40 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.ஐ.நா., மற்றும் அரபு நாடுகளின் கூட்டமைப்பு மேற்கொண்ட அமைதி நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை. சிரியா அரசுக்கு, ரஷ்யா, சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் ஆதரவளிக்கின்றன.கிளர்ச்சியாளர்கள், சில நகரங்களை கைப்பற்றுவதும், ராணுவம், வான் வழி தாக்குதல் நடத்தி, அந்தநகரங்களை கைப்பற்றுவதும் வாடிக்கையாகி விட்டது. 

தொடர் சண்டையால், மூன்று லட்சம் பேர், அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து விட்டனர். அலெப்போ என்ற நகரை, கிளர்ச்சியாளர்கள் தங்கள் வசம் வைத்துள்ளனர்.இதற்கிடையே, சிரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள, ஈராக் எல்லையை யொட்டிய, மயாதீன் என்ற மற்றொரு நகரை, கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். கிளர்ச்சியாளர்களின் தொடர் தாக்குதலால், தீ எசார் நகரில் உள்ள, விமானப் படை தளத்திலிருந்து ராணுவத்தினர் வெளியேறி விட்டதாக, சர்வதேச பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். 

No comments

Powered by Blogger.