''சிறந்ததோர் எதிர்காலத்திற்கு இஸ்லாமும் அபிவிருத்தியும்'' - தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆய்வரங்கு
(ஹபீப் மொஹமட்)
தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கைகள், அரபு மொழி பீடமும் மலேசிய கெபங்ஸான் பல்கலைக்கழக சமய மெய்யியல் துறையும் இணைந்து எதிர்வரும் 2012.11.15 ஆம் திகதி வியாழக்கிழமை தென்கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு நாள் சர்வதேச ஆய்வரங்கு ஒன்றினை 'சிறந்ததோர் எதிர்காலத்திற்கு இஸ்லாமும் அபிவிருத்தியும்' எனும் கருப்பொருளில் நடாத்துதவதற்கு திட்டமிட்டுள்ளது.
இந்நிகழ்வு காலை, மாலை என இரண்டு அமர்வுகளாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாய்வரங்கிற்கு 22 மலேசிய ஆய்வாளர்களும், 10 தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆய்வாளர்களும் தமது ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பிக்கவுள்ளனர். இவ்வாய்வரங்கில் அங்குரார்ப்பண நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக பதில் உபவேந்தர் கலாநிதி சபீனா இம்தியாஸ் கலந்து கொள்வதோடு இப்பிராந்திய முக்கிய கல்வியியலாளர்கள் விஷேட அதிதிகளாகவும் கலந்து கொள்ளவுள்ளதாக தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் பீடாதிபதி அஷ் ஷேய்க் ஏ.பீ.எம். அலியார் தெரிவித்துள்ளார்.
Post a Comment