கருமலையூற்று பள்ளிவாசல் தொடர்பில் உயர்மட்ட கூட்டம் (படங்கள்)
(அஸ்ஸிஹாபி)
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள கருமலையூற்று கிராம மக்கள் எதிர் நோக்கிவரும் பிரச்சினைகள் சம்பந்தமான கலந்துரையாடலொன்று இன்று திங்கட்கிழமை கருமலையூற்று புதிய ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இதன்போது மீன்பிடித்தொழிலில் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் இருக்கும் காணி மற்றும் கருமலையூற்றுப் பள்ளிவாசல் முதலானவை சம்பந்தமாக ஆராயப்பட்டது.
இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் அமைச்சரும்மான அமீர் அலி,எம்.எஸ்.சுபையர் ஆகியோரோடு பள்ளிவாசல் நிருவாகிகளும் மூதூர் 'பீஸ் ஹோம்' நிறுவனத்தின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள கிழக்கு மாகாண சபையின் அமர்வின்போது கருமலையூற்று கிராம மக்களது பிரச்சினை சம்பந்தமான தனிநபர் பிரேரணையொன்று மாகாண சபை உறுப்பினர் அமீர் அலியினால் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிய வருகிறது.
Post a Comment