பாராளுமன்ற சமையற்கூட கோஹிலா கிழங்கில் சயனைட் நச்சுப்பொருள்
பாராளுமன்ற சமையற்கூடத்துக்கு அனுப்பப்பட்ட கோஹிலா கிழங்கில் சயனைட் நச்சுப்பொருள் கலந்திருந்தது, அரச இரசாயனப் பகுப்பாய்வாளரின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற சமையற்கூடத்தில் சமைக்கப்பட்ட கோஹிலா கிழங்கு கறி, வழக்கத்துக்கு மாறாக சிவப்பு நிறத்தில் இருந்தது. இதையடுத்து, சமைக்கப்பட்ட மற்றும் சமைக்கப்படாத கிழங்கு மாதிரிகள் அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் முடிவு பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையிலேயே, பாராளுமன்ற சமையற்கூடத்துக்கு அனுப்பப்பட்ட கோஹிலா கிழங்கில் சயனைட் நஞ்சு கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாராளுமன்ற காவல்துறை பலரிடம் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளது. விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
அதிகளவில் பயன்படுத்தப்பட்ட உரம், அல்லது பூச்சிக்கொல்லியினால் கோஹிலா கிழங்கில் சயனைட் நச்சு ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் தெரிவித்துள்ளது.
Post a Comment