ரவூப் ஹக்கீம் கைச்சாத்திட்டாரா..?
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப் பிரேரணையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் கைச்சாத்திட்டாரா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றுள்ள ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சியிடமே இவ்வவாறு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இக்கேள்விக்கு பதிலளித்துள்ள பவித்திரா வன்னியாராட்சி, 'வெற்றுக்கடதாசியில் எவரும் கைச்சாத்திடவில்லை. யார்? யார்? கையொப்பமிட்டார்கள் என தனித்தனியாக கூற முடியாது. அரசியலமைப்பின் பிரகாரம் குற்றப்பிரேரணையை சமர்ப்பிப்பதற்கு 75 உறுப்பினர்கள் கைச்சாத்திட்டால் போதும். ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 117 உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்' என தெரிவித்துள்ளார்.
அதேவேளை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் இதுபற்றி விசாரிப்பதற்காக அவருடைய கையடக்க தொலைபேசிக்கு யாழ் முஸ்லிம் இணையம் தொடர்புகொண்டது. இருந்தபோதும் ரவூப் ஹக்கீமை தொடர்புகொள்ள முடியவில்லை.
media`vittku dimikki kodukkarathulaa ravi(rauff hakkeem)pale killaadian killadi.....
ReplyDelete