யாழ்ப்பாணத்தில் அடைமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் (படங்கள்)
(பா.சிகான்)
யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து பெய்த அடை மழை காரணமாக மக்கள் தொழில் நிலைகள் பாதிக்கப்பட்ட நிலையில் அன்றாட வாழ்க்கை போக்கவதில் மிகுந்த கஷ்டங்களை எதிர்கொண்டனர். யாழ் சோனகத்தெரு முஸ்லீம் கிராமமான பொம்மைவெளி பகுதியில் சுமார் 45 குடும்பங்கள் இம்மழை வீழ்ச்சியினால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இவர்களின் நிலைமை அறிந்து அங்கு விஜயம் மேற்கொண்ட யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனத்தின் தலைவரும் சமூக சேவகருமான நிலாம் தனது சொந்த நிதியுதவியில் அம்மக்களுக்கான உணவுகளை வழங்கினார்.
இவன் தாண்டா தலைவன். மற்றவர்கள் எல்லாம் எங்கே போனார்கள். மக்கள் அவதிப் படும் பொது உடனடியாக காரியத்தில் இரங்கி அவர்களுக்கு உதவி செய்வது தலைமைக்கு இருக்க வேண்டிய பண்புகளில் ஒன்று. வெல்ல நிவாரணம் கிராம அதிகாரியூடகவும் இலங்கை முழுவதும் வழங்கப் பட்டது. பொம்மைவேளிக்கு கிடைக்க வில்லையா.
ReplyDeleteபொம்மைவெளியில் அண்மையில் மேற்கொள்ளப் பட்ட வீதி அபிவிருத்தி திட்டம் முறையாக திட்டமிடப் படவில்லை. வீட்டுக் காணிகளை விட ஒரு அடி உயரத்தில் வீதிகளும் கான்களும் அமைக்கப் பட்டுள்ளன. இதனால் மழைநீர் மட்டுமல்ல வீட்டில் புழங்கும் நீரும் ஒடுவதட்கு வழியின்றி வீட்டு வளவுக்குள் தேங்கி விடுகின்றது. எனவே இந்த வெள்ள சந்தர்பத்தை பயன் படுத்தி மாநகர சபை உறுப்பினர்கள் வடக்கின் வசந்தத்துடன் தொடர்புடையவர்கள் கிராம அதிகாரி ஆகியோர் உடனடியாக அரசாங்க அதிபறையும் மற்ற அதிகாரிகளையும் சந்தித்து ஒரு வீட்டுக்கு பத்து லோட் மண் போடா ஏட்பாடு செய்யவும். அல்லாவிடின் ஒவ்வொரு மலைகாலத்திலும் இம்மக்கள் மிதக்க வேண்டிய கஷ்ட நிலைக்கு ஆளாவார்கள்.