Header Ads



ஒபாமா வெற்றி - ஹமாஸ் நிராகரிப்பு, இஹ்வானுல் முஸ்லிம் வரவேற்பு, ஈரான் சந்தேகம்



பலஸ்தீனின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பு ஒபாமாவின் வெற்றி குறித்து தமது அறிக்கையை வெளியிட்டுள்ளது. “இஸ்ரேல் சார்பான அமெரிக்க கொள்கையையும் மத்திய கிழக்கு விவகாரத்தில் அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டையும் ஒபாமாவால் மாற்ற முடியாது. அதேபோன்று பலஸ்தீனர்களின் உரிமையை நிலை நாட்டவும் அவரால் முடியாது” என ஹமாஸ் அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“ஒபாமா முதல் முறை வென்றபோது அவரது புரட்சிகரமான உரையொன்றை நாம் கேட்டோம். ஆனால் அவரது உரைக்கும் கொள்கைக்கும் முரண்பாடு காணப்படுகிறது. தற்போது சியோனிச அழுத்தங்களுக்கு அப்பால் அவரது வாக்குறுதிகளை நிறைவேற்ற சந்தரப்பம் கிடைத்துள்ளது” என்று ஹமாஸ் அமைப்பின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மறுபுறத்தில் சிரிய அரசுக்கு எதிராக போராடும் எதிர்த்தரப்புகளின் பிரதான கூட்டணியின் பேச்சாளர், ஒபாமாவின் வெற்றி, சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத்தை வெளியேற்றுவதற்கு மேலும் உதவி புரிவதாக அமைய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

“ஒபாமா வெற்றி பெற்றதன் மூலம் அவருக்கு சிரியா மற்றும் சர்வதேச அளவில் சுதந்தரம் மற்றும் கெளரவத்தை நிலைநாட்ட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது” என்றும் சிரிய எதிர்த்தரப்பின் சிரிய தேசிய கெளன்சில் பேச்சாளர் ஜியோர்ஜ் சப்ரா குறிப்பிட்டார். 

எனினும் ஒபாமாவின் வெற்றி குறித்து பல ஈரானியர்ளும் சந்தேகம் கண்டுகொண்டு பார்த்து வருவதாக டெஹ்ரானில் இருக்கும் பி.பி.சி. செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். எனினும் ஒபாமாவின் வெற்றியின் மூலம் ஈரான் மீதான யுத்தம் ஒன்றுக்கான வாய்ப்பு குறைந்திருப்பதாகவும் ஈரானியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

எனினும் ஒபாமாவின் வெற்றியின் மூலம் ஈரான் மீது மேலும் அழுத்தங்கள் பிரோகிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு அரசியல் வாதிகள் குறிப்பிட்டுள்ளனர். ஈரானின் நடுநிலைப் பத்திரிகையான ‘டெய்லி அர்மான்’ வெளியிட்ட செய்தியில் ரொம்னி வெற்றி பெறுவதை விடவும் ஒபாமாவின் வெற்றி ஈரானுக்கு அபாயம் குறைவாகவே இருக்கும் என குறிப்பிட்டுள்ளது. குறைந்தது ஈரான் மீதான யுத்தம் ஒன்று தவிர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. 

இதேவேளை ஒபமாவின் வெற்றியை வரவேற்றுள்ள எகிப்து இஹ்வானுல் முஸ்லிமின் முக்கியஸ்தர்கள் அமெரிக்காவுடனும், ஒபாமாவுடனும் இணைந்து பணியாற்ற தயாரென தெரிவித்துள்ளனர். Tn

1 comment:

  1. ARASYAL AASANATTHIN SUKAMAANA SOODU YAARAITTHAAN WIDDU WATTHATHU.ETHIR KAALATTHIL IHWAANKAL AMERCAWIN SELLAPPILLAYAAKAWUM MAARALAAM .KAALAMTHAAN PATHIL SOLLA WEANDUM.

    ReplyDelete

Powered by Blogger.