Header Ads



பாராளுமன்றத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆற்றிய உரை


(66வது வரவுசெலவுத்திட்டத்தின் மீதான கைத்தொழில் வணிக அமைச்சர்  றிசாத் பதியுதீன் இன்று 15-11-2012 ஆற்றிய உரையின் விபரம்)

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

 சபாநாயகர் அவர்களே!

அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  நிதி அமைச்சர் என்ற ரீதியில் இலங்கையின் 66வதும் இந்த அரசாங்கத்தின் 8வதுமான வரவுசெலவுத்திட்டத்தை நவம்பர் 8ந் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இந்த வரவு செலவுத்திட்டம் பிரதானமாக சமூக பொருளாதார அபிவிருத்தியையும், வறிய மக்களுக்கு நிவாரணத்தையும், முன்னைய வரவு செலவுத்திட்டங்களில் முன்வைக்கப்பட்ட யோசனைகளை வலுப்படுத்துவதுமான முன்மொழிவுகளை கொண்டுள்ளதாக அமைந்துள்ளமை மிகவும் வரவேற்கத்தக்க விடயமொன்றாகும். இந்த வரவுசெலவுத்திட்டம் மறைமுகமாக ஏற்றுமதி வருவாய் உழைப்புக்கு ஆதரவாக உள்ளதுடன், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சித்துறைகளை வலுப்படுத்தி உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கக்கூடிய முன்மொழிவுகளை உள்ளடக்கியதாகவும் அமைந்துள்ளது. சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் எமது நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெழும்பாக இருப்பதுடன், அவைகள் எமது இறக்குமதி செலவினத்தை குறைப்பதற்கும் ஏதுவாக உள்ளன. 

ஜனாதிபதி அவர்கள் அவரது முதலாவது பதவிக்காலத்தில் இந்த நாட்டிலிருந்தும் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்தல் வேண்டுமென்ற கோற்பாட்டில் மிக வலுவாக நின்று, பல பாதகமான சூழ்நிலையின் மத்தியிலும் வெற்றி அடைந்துள்ளார். அவரது பதவியின் இரண்டாவது தவணைக்காலம் நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்திச்செய்து இலங்கையை தெற்காசியாவின் மத்திய வர்த்தக நிலையமாகவும், ஆசியாவின் அதிசயமாகவும், உருவாக்குவதென்ற செயற்பாட்டுக்ளு அர்பணிக்கப்பட்டுள்ளது. இந்த வரவு செலவுத்திட்டத்தின் யோசனைகள் சிறய மற்றும் மத்திய முயற்சியாளர்களையும் விவசாய துறையையும் தேயிலை உற்பத்தித் துறைகளையும், ஒன்றுடனொன்று இணைத்து பொருளாதாரத்தை அபிவிருத்திச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கௌரவ உறுப்பினர் திருசுமந்திரன் அவர்கள் நிதியமைச்சுப்பொறுப்பை ஜனாதிபதி அவர்கள் வகித்துவருவது பொருத்தமானதல்ல என இச் சபையில் கூறினார் ஏனெனில் பாராளுமன்றத்துக்கு அவரினால் பொறுப்புக்கூறமுடியாது என்ற காரணத்தைக் காட்டினார். ஆனால் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு நிதித்துறை வழங்கும் பங்கு மிகவும் முக்கியமானதாகும். ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர்வதற்கும், அதை திறன்பட பேணுவதற்கும்  நிதித்துறையின் செயற்பாடுகளை முக்கிய காரணமாக அமைகின்றன. இந்த அடிப்படையில் எமது நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்து மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கு நிதித்துறையை அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் தன்வசம் வைத்திருப்பதில் தவறொன்றும் இல்லை என்றே நான் கருதுகின்றேன்.  

மஹிந்த சிந்தனையின் கீழ் பிரேரிக்கப்பட்டுள்ள பொருளாதாரக் கொள்கைகள் இந்த நாட்டுக்கு நன்மை பயப்பதை நாங்கள் காணக்கூடியதாக உள்ளது. இந்த வரவுசெலவுத்திட்டதில் கூறப்பட்டுள்ள யோசனைகளை நோக்குமிடத்து இலங்கையின் கிராமிய, சமூக, பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதாக அமைந்துள்ளதோடு கணிசமான அளவுக்கு கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திக்கு ஊக்கமளிக்கக்கூடியதாகவும் அமைந்துள்ளன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பஸில் ராஜபக்ஷ அவர்கள் நாட்டின் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மே;படுத்துவதற்கும் பல்வேறுபட்ட அபிவிருத்தித்தட்டங்களை தயாரித்து செயற்படுத்தி வருகின்றார். அந்த செயற்பாடுகளின் விளைவாகவே இலங்கையில் வறுமை வீதம் இன்று எட்;டு தசம் ஒன்பது வீதமாக குறைவடைந்துள்ளது. இந்த நாட்டு மக்களின் வாழ்வாதாரம் அதிகரித்து அத்துடன் பொருளாதார வளர்ச்சிகளை காணும் பொருட்டே பல முன்னேற்ற திட்டங்களை செயற்படுத்தும் நோக்கத்துடன் 'திவிநெகும' செயற்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு கௌரவ பஸில் ராஜபக்ஷ அவர்கள் முழு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார். திவிநெகும திட்டம் அமுல் படுத்தப்பட்டு செயற்படுமாயின் நாட்டில் வறுமை ஒழிந்து மக்கள் தன்னிரைவு அடைந்தது. மனமகிழ்ச்சியுடன் வாழக்கூடிய சூழ்நிலை ஏற்படுமென்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

பஸில் ராஜபக்ஷ அவர்கள் வடமாகாண மீள்குடியேற்றம், அபிவிருத்தி, பாதுகாப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் என்ற ரீதியில் வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு அயராது உழைத்துவருவதை நான் இங்கு மகிழச்சியுடன் எடுத்துக் கூற விரும்புகின்றேன். வடக்கின் வசந்த செயற்திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் பாதைகள் செப்பனிடப்பட்டு, கல்லூரிகள் புணரமைக்கப்பட்டடு வைத்தியசாலைகள் சீர்செய்யப்பட்டு, பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டு, மின்சாரம் மக்களுக்கு வழங்கப்பட்டு பலதுறைகளிலும் வடமாகாணம் அபிவிருத்தி அடைந்து வருகின்றதென்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். 2009ம் ஆண்டு மே மாதம் அளவில் இடம்பெயர்ந்த 3 இலட்சத்திற்கும் கூடுதலான மக்கள் இன்று அவர்களின் சொந்த இடங்களிலோ அல்லது ஏனைய இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டு அவர்களின் வாழ்வாதார உழைப்புகள் சீராக நடைபெறுவதற்கு ஜனாதிபதி செயலணியின் தலைவர் என்ற ரீதியில் கௌரவ பஸில் ராஜபக்ஷ அவர்கள் ஆற்றிவரும் சேவைகள் தமிழ் பேசும் மக்களால் மறக்க முடியாதவையாகும்.  
உலக அளவில் பொருளாதார வளர்ச்சி மந்த நிலையிலும் தொடர்ந்தும் இருந்துவருவதுடன், ஐக்கிய அமெரிக்காவிலும் ஐரோப்பிய யூனியன் நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சி மிகவும் மந்தமாக காணப்படுகின்றமையாலும், எமது ஏற்றுமதிகளுக்கு இந்தச் சூழ்நிலைகள் மிகவும் சவால் வாய்ந்தனவாக அமைந்துள்ளதுடன், எங்களது ஏனைய ஏற்றுமதிச்சந்தைகளான சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு பாதித்துள்ளதுடன், காலநிலை மாற்றங்களும் எமது ஏற்றுமதி சந்தைக்கு பாதிப்புகள் ஏற்படுத்துவதுடன், உணவுப்பாதுகாப்புக்கும் விநியோகத்திற்கும் பாதிப்பையும் ஏற்படுத்திகின்றன. 

சர்வதேச நாணய நிதியத்தினால்  வெளியிடப்பட்ட உலகப்பொருளாதார தோற்ற அறிக்கை 2013ம் ஆண்டு உலகப் பொருளாதாரம் மந்த கதியிலே வளருமென சுட்டிக்காட்டுகிறது. ஏலவே மீட்சிப்பெற்றுவந்த பொருளாதாரங்களும் இப்போது பலவீனமடைந்து வருகின்றன. அபிவிருத்தி அடைந்த நாடுகளின் பொருளாதாரம் மிகவும் மந்த நிலையில் காணப்படுவதானால் வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்துள்ளது. அபிவிருத்தி அடைந்துவரும் பொருளதாரத்தைக் கொண்டுள்ள நாடுகளிலும் முன்பு பொருளதார வளர்ச்சி வலுவானதாக இருந்த போதிலும் இப்போது அந்நாடுகளிலும் நொயு;வுத்தன்மை காணப்படுகின்றது. சர்வதேச நாணய நிதியம் 2013ம் ஆண்டுக்கான வளர்ச்சிகளை எதிர்வு கூறும் போது அபிவிருத்தி அடைந்த பொருளாதாரங்கள் வளர்ச்சி இரண்டு வீதத்திலிருந்து ஒன்று தசம் ஐந்து வீதமாக குறையுமென்றும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் பொருளாதாரம் ஆறு வீதத்திலிருந்து ஐந்து தசம் ஆறு வீதமாக குறைவடையுமென்று எதிர்வு கூறியுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பதிலாக உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமென்ற அரசாங்கத்தின் கொள்கை வெற்றி அடைந்துள்ளதென்றே நான் கூற விரும்புகின்றேன். 2013ம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட உரையில் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாம் இப்போது அரிசியை இறக்குமதி செய்வதில்லை என்றும், சுற்றுலா பிரயாணிகளினதும் ராஜ தந்திர சமூகத்தினரினதும் தேவைகளுக்காகவே அரிசி இறக்குமதி செய்யப்படுகின்றதென்று கூறியுள்ளார். இந்த நாட்டின் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் சோளத்தினதும், உழுந்தினதும் உற்பத்தி அதிகரித்துள்ளது. இறக்குமதிக்கு பதிலாக உள்ளுர் உற்பத்திகளை அதிகரிக்கும் நோக்குடன் விவசாய உற்பத்திகளுக்கு கவரச்சிகரமான மட்டத்தில் விலைகள் பேணப்பட்டுவருகின்றன. நெல்லுக்கான தற்போதைய உத்தரவாத விலை கிலோவுக்கு ரூபா 28 தொடக்கம் 30 வரை என்ற விலையளவு கிலோவுக்கு ரூபா 32 தொடக்கம் ரூபா 35 வரை என எதிர்வரும் பெரும்போக நெற் பயிர்செய்கைக்கு விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையும் இயற்கை பசளையில் பயிர்செய்யப்படும் ஒரு கிலோ நெல்லுக்கு ரூபா 40 உத்தரவாத விலை அளிக்கப்பட்டுள்ளமையும், மிகவும் மெச்சத்தக்க முன்மொழிவாகும். 

2013ம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் கைத்தறி, நெசவு துறையையும் மேம்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்மொழியப்பட்டுள்ளமையை நான் பெரிதும் வரவேற்கின்றேன். எனது அமைச்சினால் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தாபிக்கப்பட்ட கைத்தறி நெசவு துறை செயலணி அதனது நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு இந்த முன்மொழிவுகள் உறுதுணையாக இருக்குமெனவும் நான் கருதுகின்றேன். இலங்கையின் ஏற்றுமதியில், கைத்தறி நெசவு உற்பத்திகள் கணிசமான பங்களிப்பை அளித்துவருன்றது. கைத்தறி நெசவுத்துறையை மேம்படுத்துவதன் மூலம், நாங்கள் சர்வதேச சந்தைகளில் எமது உற்பதிகளை சந்தை படுத்துவதுவதற்கு வழிவகுப்பதுடன், கைத்தறி நெசவுத்துறையை நவீனப்படுத்தி இளைஞர் யுவதிகளையும் ஈடுபடுத்துவதற்கு வழிசமைக்குமென நான் நம்புகின்றேன். எனது அமைச்சு ருளுயுஐனுஇ தேசிய முயற்சிகள் அபிவிருத்தி அதிகார சபை, மொறட்டுவ பல்கலைகழகம், இலங்கை எற்றுமதி அபிவிருத்திச் சபை, புடவைத் திணைக்களம், இலங்கை புடைவைகள் மற்றும் ஆடைகள் நிறுவனம், தனியார் கைத்தறி நெசவுத்துறை பிரதிநிதிகள் ஆகியளவற்றுடன் இணைந்து கைத்தறி நெசவுத்துறையை மேம்படுத்துவதற்கு திட்டங்களை மேற்கொண்டுள்ளது. எமது நாட்டில் உற்பத்தியாகும் கைத்தறி நெசவு பொருட்கள் இத்தாலி,மாலைதீவு, ஜேர்மனி, பிரான்ஸ், ஐக்கிய ராச்சியம், தாய்லாந்து, நெதர்லாந்து, நோர்வே ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. எனது அமைச்சின் கிழுள்ள ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் அளிக்கப்பட்டுள்ள தரவுகளின் பிரகாரம் 2009ம் ஆண்டு பூச்சியம் தசம் ஒன்பது மில்லியன் டொலராக இருந்து கைத்தொழில் நெசவு ஏற்றுமதிகள் 2011ல் ஒன்று தசம் ஒன்று மில்லின் டொலர்களாக அதிகரித்துள்ளது. இந்த ஏற்றுமதி 2015ல் இரண்டு தசம் நான்கு மில்லியன் டொலர்களாக அதிகரிக்குமென  எதிர்ப்பார்க்கப்படுகிறது. கைத்தொழில் நெசவுத் துறை அதிகமான தொழில் வாய்ப்புகளை அளிக்கும் அதே சமயத்தில் குறைவாகவே மின்சாரத்தையும் ஏனைய பயன்தரு பொருட்களையும் நுகர்கிறது. தற்போது இலங்கையில் ஐந்நூற்றி பதினொரு கைத்தறி நெசவு நிலையங்கள் இருப்பதுடன், 2971 நெசவாளர்கள் கைத்தறி நெசவு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் தனியார் துறையினரும் கூட்டுறவு துறையினரும் பல கைத்தறி நெசவு ஆலைகளை நடாத்தி வருகின்றனர். கைத்தறி நெசவு இலங்கையில் வடமேல், மேல் மற்றும் மத்திய மாகாணங்டகளிலே பெருமளவு செய்யப்பட்டு வருகின்றது. கிழக்கு மாகாணம் கைத்தறி நெசவுக்கு புகழ் பெற்றதாக இருத்த போதிலும் 2004ம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி பேரலையின் அழிவினால் இத்துறைக்கு பெருஞ்சேதம் ஏற்பட்டுள்ளது. எனினும், கிழக்கு மாகாணத்தில் கைத்தறி நெசவு சிறிது சிறிதாக வளர்ச்சியடைந்து வருவதைக் காணமுடிகிறது. 

கைத்தறி நெசவுத்துறைக்கு அளிக்கும் புத்துயிரை, சேலை மற்றும் ஆடையணி உற்பத்தித்துறைக்கும் அளித்து, அவைகளையும் விரிவுப்படுத்துவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம். கடந்து 21 ஆண்டுகளாக எனது அமைச்சின் மேற்பார்வையின் கீழ் நடாத்தப்பட்டு வரும் ரன்சலு தேசிய கைத்தறி பொருட்காட்சியில் ஏனைய நெசவு விடயங்களையும் உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் 22வது ரன்சலு பொருட்காட்சி பன்டார நாயக்கா ஞபாகார்த்த மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது என்பதை உங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் கைப்பணிப்பொருட்கள் உலக சந்தையை இப்பொழுது அடைந்துள்ளதென்பதை உங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். டுபாயில் இயங்கிவரும் குயமih புசழரிஇ நிறுவனம் நினைவுப் பொருட்களையும், பரிசுப்பொருட்களையும் விநியோகிப்பதில் புகழ்பெற்ற ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனம் சுற்றுலா பிரயாணிகளுக்கு ஏற்றதாக கைப்பணிப் பொருட்களை ஏற்றதாக கொள்வனவு செய்து விற்பனை செய்து வருகின்றது. இந்த நிறுவனம் ஊடாக இலங்கை கைப்பணி பொருட்களும் டுபாய் மற்றும் அபுதாபி வியட்நாம் நாடுகளில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குயமih  நிறுவனம் இலங்கையின் இரண்டு தொடக்கம் மூன்று மில்லியன் டொலர்களை முதலீடு செய்வதாகவும் மேலும் விரிவுபடுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. கண்டியிலுள்ள உடப்பெரதெனியவில் வதியும் மக்கள் இந்த நிறுவனத்திற்கான கைப்பணி பொருட்களை உற்பத்தி செய்து வழங்கி வருகின்றார்கள் என்பதை இங்கு எடுத்துக் கூற விரும்புகின்றேன்.

சபாநாகயர் அவர்களே!

வரவுசெலவுத் திட்டத்தில் மெனறாகல, அம்பாறை, வவுனியா ஆகிய பிரதேசங்களில் இறப்பர் மரம் பயிரிடுகையை மேலும் விரிவுப்படுத்துவதற்கு முன்வைக்கப்பட்டுள்ள யோசனையை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்பதுடன், இது இந்த மாவட்டங்களிலுள்ள சிறு உற்பத்தியாளர்களுக்கு ஊக்குவிப்பை அளிக்குமென நான் கருதுகின்றேன். எனது அமைச்சு இறப்பர் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் இறப்பர் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இறப்பர் உற்பத்தி அளவினை தேசிய மட்டத்தில் அளவிடுவதற்கான முயற்சியினை முதன் முறையாக எனது அமைச்சு மேற்கொண்டுள்ளதுடன், இறப்பர் உற்பத்தி துறைக்கு தேவையான தரமான இறப்பர் பரிசோதிப்பதற்கான பரிசோதனை நிலையங்களை தாபிப்பதற்கும் முயற்சி எடுத்துவருகின்றது. 2022ம் ஆண்டு அளவில் இறப்பர் ஏற்றுமதி 4 பில்லியன் டொலரை அடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை இயற்கை இறப்பர் உற்பத்தியில் உலகில் ஏழாம் இடத்தில் உள்ளது. இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் இறப்பர் பொருட்கள் ஐரோப்பா மற்றும் ஐக்கிய அமெரிக்க நாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவைகள் சர்வதேச தரத்திற்கு ஏற்றதாவே உள்ளன. 2011ம் ஆண்டில் இறப்பரும், இறப்பர் உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி மூலம் ஒன்று தசம் ஒன்று பில்லியன் டொலர்கள் வருமானமாகக் கிடைத்துள்ளது.  இலங்கையின் ஏற்றுமதியில் இறப்பரும் இறப்பர் பொருட்களும் பத்து தசம் நான்கு வீதமாக உள்ளதுடன், ஏற்றுமதியில் மூன்றாம் இடத்தை வகிக்கின்றது. இலங்கையில் ஒரு இலட்சத்தி இருபத்தையாயிரம் ஹெக்கடேயர் நிலப்பரப்பிர இறப்பர் பயிர்ச்சேகை மேற்கொள்ளப்படுவதுடன், ஆண்டுக்கு ஒரு இலட்சத்து ஐம்பத்திமூவாயிரம் தொன்களுக்கு கூடுதலாக இறப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது. 

வரவு செலவுத்திட்டத்தில் தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு செய்யப்பட்டுள்ள மும்மொழிவினை நான் மெச்சுகின்றேன். தகவல் தொழில்நுட்ப துறையை மேம்படுத்துவதன் மூலம் எதிர்வரும் 03 ஆண்டுகளில் ஒரு இலட்சத்து ஐப்தாயிரம் நேரடி தொழில் வாய்;ப்புகளை ஏற்படுத்தலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.. தகவல் தொழிநுட்ப துறையினரின் வருமான வரி வீதத்தை பதினாறு வீதத்திற்கு மட்டுப்படுத்தியமையை தொலைத்தொடர்பு இன்டர்நெட் வரிகட்டணங்களை இருபது வீதத்திலிருந்து பத்து வீத்ததால் குறைத்தமையையும் நான் வரவேற்கின்றேன். 

 சபாநாயகர் அவர்களே!

உலகப் பொருளாதார வளர்ச்சி மந்த நிலையில் இருக்கின்ற படியினால் ஏற்றுமதியில் பொதுவாக வீழ்ச்சி காணப்பட்டு வருகிறது. எமது நாட்டின் ஏற்றுமதி ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு குறைவடைந்துள்ள போதிலும், நாம் எமது ஏற்றுமதிகளை வேறு நாடுகளுக்கு விரிவுப்படுத்துவதில் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றோம். 

எங்களது ஏற்றுமதிகளை பாதுகாப்புக்கும் நோக்குடன் நாங்கள் பல செயற்பாடுகளை நாங்கள் நடைமுறைப்படுத்திவருகின்றோம். எங்களின் எதிர்கால ஏற்றுமதி யுக்திகள் தொடர்பாக முன்னனி வர்த்தக கழக உறுப்பினர்களுடனும் நான் ஆலாசனைகள் நடத்திவந்துள்ளதுடன், எங்களது சந்தையை பன்முக்கப்படுத்தும் நோக்கத்துடன், ஓர் ஆலோசனைக் குழுவையும் தாபித்துள்ளோம். எமது ஏற்றுமதிகளை பல நாடுகளுக்கும் விரிவு படுத்தும் நோக்குடன் வர்த்க திணைக்களத்தின் சேவைகளை விரிவுபடுத்தியும், திறன்பட செயற்படுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். நாங்கள் தாபித்துள்ள ஆலோசனைக் குழுவில் பல முக்கிய அமைச்சின் பிரதிநிதிகளும் திறைசேரி மற்றும் தனியார் துறையைச்சார்ந்த உறுப்பினர்களும் அங்கம் வகிக்கின்றார்கள். சந்தைப்படுத்தலை பன்முகப்படுத்தும் ஆலோசனைக்குழுவின் தலைவராக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் கடமையாற்றுவதுடன், குழுவின் ஒருங்கிணைந்த செயற்பாட்டுக்கு வர்த்தகத் திணைக்களம் பொறுப்பாக உள்ளது. வளர்ந்து வரும் பொருளாதாரங்களான சீனா, பிரேஸல், தென் ஆபிரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுக்கு எமது பொருட்களை ஏற்றுமதி செய்து அங்கு சந்தைப்படுத்தும் உத்திகளை உருவாக்குவதே இந்த ஆலோசனைக்குழுவின் முக்கிய பணியாகும். இலங்கை தற்பொழுது இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் செய்துள்ள வர்த்தக உடன்படிக்கைகளையும், மற்றும் ஆசிய பசுபிக் வர்த்தக உடன்படிக்கை, தெற்காசிய சுதந்திர வர்த்தக பிரதேச மற்றும் பூகோள முறைமை வர்த்தக செயற்பாடுகளையும் இந்த ஆலோசனைக்குழு மீளாய்வு செய்யும்.

முதன்முறையாக கடந்த செம்டெம்பர் மாதத்தில் எமது நாட்டின் முன்னணி ஏற்றுமதியாளர்களுடன் ஏற்றுமதி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டு நேரடியான ஆலோசனைக் கூட்டங்கள் நடாத்தப்பட்டன. நாங்கள் ஏற்றுமதியாளர் கருத்தரங்குக்கு புத்துயிர் கொடுத்து கடந்த ஜுலை மாதத்தில் ஏற்றுமதியாளர்களின் கருத்தரங்கு வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இந்திய மற்றும் சீனச்சந்தைகளுக்கு எமது பொருட்களை ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். 

இதன்பின்னணியில் இந்திய வர்த்தக அமைச்சர் கௌரவ ஆனந் ஷர்மா அவர்களின் தலைமையில் உயர்மட்ட இந்திய வர்த்தக பிரதிநிதிகள் குழுவொன்று சென்ற ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு வந்து கருத்து பரிமாற்றங்களை மேற்கொண்டது. இந்தியா, தற்போதைய வர்த்தக போக்குவரவு பெறுமதியினை 2015ம் ஆண்டு அளவில் பத்து பில்லியன் டொலர்களுக்கு அதிகரிப்பதற்கும், ஐந்து பில்லியன் டொலர்கள் பெறுமதியான முதலீடுகளை இலங்கையில் செய்வதற்கும் உடன்பட்டுள்ளது. இது தொடர்பாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு பஸில் ராஜபக்ஷ அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு நன்றி கூற கடமைபட்டுள்ளேன். இந்தியா இரு பாரியஅளவிலான ஏற்றுமதி உற்பத்தி வலயங்களை - ஒன்று மோட்டார் வாகன உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்வதற்கும், மற்றது மருந்துகளை உற்பத்தி செய்வதற்கும் உடன்பட்டுள்ளது. இதன் மூலம் நாங்கள் பிராந்திய உற்பத்தி வலயமைப்பில் இணைவதற்கு வழிசமைக்கப்பட்டுள்ளது. கௌரவ அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் முயற்சியின் விளைவாக கடந்த செப்டெம்பர் மாதம் இலங்கை வந்த இந்திய நெசவுத்துறை தொழில் சார்ந்த பிரதிநிதிகள் குழு, இந்தியாவிலுள்ள ஆடையணிச்சந்தையை இலங்கைக்கு திறந்து விடுவதற்கு உடன்பட்டதுடன், ஐந்து மில்லியன் ஏற்றுமதி கோட்டாவை எட்டு மில்லியனாக அதிகரிப்பதற்கும் உடன்பட்டது. இந்தியாவிலிருந்த இன்னுமொரு உயர்மட்ட வர்த்தக பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த மாதம் வரவிருக்கிறது என்பதையும் நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 
சீனாவுடன் எமது வர்தகத்தை வளர்ப்பதற்கான முயற்சிகள் வெற்றியளித்துள்ளதென நான் கூற விரும்புகின்றேன். 2007ம் ஆண்டு தொடக்கம் 2015ம் ஆண்டு வரையுள்ள காலப்பகுதியில் சீனாவுடனான எங்கள் வர்த்தகம் 719 வீதம் வளர்ச்சியடைந்துள்ளது. சென்ற செப்டெம்பர் மாதத்தின் இலங்கை வந்திருந்த சீனாவின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினர் சீனசந்தைக்கு எமது பொருட்களை அனுமதிப்பதற்கு எங்களுக்கு சார்பாக கவனமெடுத்து வருவதாக கூறியுள்ளது. 

இலங்கையின் ஏற்றுமதி சமூகத்தின் சார்பில் எங்களது பொருட்களது ஏற்றுமதியை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் அதிகரிப்பதற்கு ஆதரவளித்தமைக்கு இவ்விரு நாடுகளுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். 

நாம் பிராந்திய மற்றும் பல்தரப்பட்ட முயற்சிகளை எடுப்பதோடில்லாது வர்த்தகர்களுடன் நேரடி பேச்சுவாரத்தைகளையும் நடாத்தி வருகின்றோம். இந்த வகையில் இலங்கை தென் ஆபிரிக்க வர்த்தக கருத்தரங்கொன்றினையும்,  இலங்கை சிங்கபூர் வர்த்தக கருத்தரங்கொன்றினையும் இலங்கை இந்தியா வர்த்தக கருத்தரங்கு ஒன்றினையும் நடாத்தியுள்ளோம். 

பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதென்பது ஒரு தனிப்பட்ட நிறுவனமொன்றினால் மேற்கொள்ளப்பட்டு வெற்றிபெறக்கூடிய விடயமல்ல நானும் எனது அமைச்சும் இது தொடர்பாக சகல பங்காளிகளினதும் ஒத்துழைப்பை கோர விரும்புகின்றோம். எமது பொருளாதரம் வளருவதற்கு ஏற்றுமதி மிகவும் முக்கியமான காரணிகளில் ஒன்றாகும். எனவே, நாங்கள் தனிப்பட்ட மற்றும் அரசியல் பிரச்சினைகளை புறந்தள்ளி ஏற்றுமதியை வளர்ப்பதற்று அர்பணிப்புடன் செயற்பட வேண்டிய நிலையை அடைந்துள்ளோம். எனவே, நாங்கள் எல்லோரும் எங்கள் நாட்டு உற்பத்தியின் ஏற்றுமதிகளை வளர்ப்பதற்கு சகல வழிகளிலும் முயற்சிகளை மேற்கொள்ளுதல் வேண்டும். 

தொழில்சங்கங்கள், அறிவாளர்கள் வரத்தக சம்மேளனங்கள் நிபுணர்கள் ஆகியோரின் யோசனைகள் புறப்பட்டு திறைசேரி கலாநிதி பி.பி. ஜயசுந்தரவின் அர்பணிப்புடன் தயாரிக்கப்பட்ட இந்த வரவுசெலவுத்திட்டம் பொது மக்களால் நன்கு வரவேற்கப்பட்டுள்ளதுடன், மஹிந்த சிந்தனையின் எதிர்பார்புகளை பூர்த்தி செய்வதற்கு வழிசமைக்குமெனவும் நான் மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன 

No comments

Powered by Blogger.