Header Ads



காதி நீதிமன்ற சட்டக்குறைகள் விரைவில் நீக்கப்படும் - ரவூப் ஹக்கீம் உறுதி


(அஸ்ரப் ஏ சமத்)

இலங்கையின் பண்நெடுங்காலமாக  முஸ்லீம் காதீ நீதிமன்ற முறை நடைமுறையில் உள்ளது. இச் சட்டத்தினை மீள மாற்றவேண்டி உள்ளது. அதற்காக உச்ச நீதிமன்ற நீதிபதி சலீம் மர்சூப் தலைமையில் இச் சட்டத்தினை மாற்றியமைப்பதற்கு குழு ஒன்று இயங்குகின்றது. மிக விரைவில் முஸ்லீம் காதி நீதிமன்ற  சட்டத்தில் இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்து அதனை நடைமுறைப்படுத்த நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. என நீதி அமைச்சர் றவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

ஏறாவூர் ஸர்மிலா செய்யத்தின்  சிறகு முளைத்த பெண் கவிதை நூல் வெளியீட்டு வைபவம்  நேற்று (18) கொழும்பு தபால் தலைமையகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வு டாக்டர் தி.ஞாணசேகரன் தலைமையில் நடைபெற்றது. நூல் அறிமுக உரையை  பலாலி ஆசிரியர் கலாசாலை முன்னாள் அதிபர் கவிஞர் சோ. பத்மநாதனும் நூல் ஆய்வினை சட்டததரணி கவிஞர் மர்ஸூம் மௌலானாவும் சாந்தி சச்சிதானந்தன்  என்.எம் அமீன் ஆகியோறும் வாழ்த்துறை வழங்கினார்கள்  நூலாசிர் ஐனாபா ஸர்மிலா செய்யத் ஏற்பரை நிகழ்த்தினார்.

நூலின் முதற்பிரதியை பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட நீதியமைச்சரும்  முஸ்லீம் காங்கிரஸின் தலைவருமான  றவுப் ஹக்கீமிடமிருந்து கவிஞரும் டொக்டர் தாசீம் அகமத் பெற்றுக் கொண்டார்கள்.
இவ் விழாவின் பாராளுமன்ற உறுப்பினர் பசீர்சேகுதாவுத் புரவலர் ஹாசிம் உமர் உட்பட இலக்கியவாதிகளும் பலரும் கலந்து கொண்டனர்.








No comments

Powered by Blogger.