Header Ads



கல்முனை மாநகரசபை தீர்மானங்கள்


(சௌஜீர் ஏ முகைடீன்)

உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் அனுசரணையுடனும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியுடனும் ஆசிய மன்றம் நடைமுறைப்படுத்திவரும் உள்ளுர் பொருளாதார ஆட்சி செயறடதிட்டத்தின் கீழ் ஆசிய மன்றத்தின் உதவியுடன் கல்முனை மாநகர சபையில் மக்கள் பங்கேற்புடனான வரவு செலவுத்திட்ட தயாரிப்பு, வருமான அதிகரிப்பை இலகுபடுத்துவதற்கான செயன்முறைகளை நடைமுறைப்படுத்துவதற்காக சபையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாக ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் தெரிவித்தார்.

2013 ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட தயாரிப்பில் பொதுமக்கள் பங்களிப்பை பெற்றுக்கொள்ளும் நோக்கில் தெரிவு செய்யப்பட்ட குழுக்களுடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கும், 2014ம் வருடத்திற்கான வரவு செலவு மற்றும் நான்காண்டு செயற்திட்டங்களை கிராம சேவையாளர் பிரிவு ரீதியாகத் தயாரித்தல். 

அத்தோடு கல்முனை மாநகர சபைப்பிரிவுக்கான நகர அபிவிருத்தித்திட்டத்தினை தயாரிதத்தல், மாநகர சபைக்கு சேர வேண்டிய வருமான நிலுவைகளை அறவீடு செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதோடு இதற்காக 03 குழுக்களைத் தெரிவுசெய்தல், தயரிக்கப்பட வேண்டிய அனைத்து துணைவிதிகளையும் தயாரிப்பதுடன் இதற்காக ஒரு குழு நியமனம் செய்தல் அத்தோடு வர்தமானியில் பிரசுரிக்க நடவடிக்கை எடுத்தல்.  

மக்களுக்கு அறிவுறுத்துவதற்கும் விழிப்புனர்வுக்குமாக இவ்வருடத்தில் மக்கள் நடமாடும் சேவையினை செயற்படுத்துவதற்காக வருமான விழிப்புனர்வு வாரம் ஒன்றினை பிரகடனம் செய்தல், இவ்வாறு அறவிடப்படும் வருமாங்களை அவ்வப்பிரதேச அபிவிருத்திக்காக செலவிடல் போன்ற விடயங்களிற்கான அங்கீகாரம் சபையில் கோரப்பட்டிருந்தது. இவற்றுக்கான அங்கீகாரம் கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு மாநகர முதல்வர்  கலாநிதி சிராஸ் மீராசாகிப் தலைமையில் நடைபெற்ற போது சபையால் ஏகமனதாக வழங்கப்பட்டது.

No comments

Powered by Blogger.