திவிநெகுமே நாட்டின் பொருளாதாரத்தை வலுவாக்கும்
(ஜே.எம்.ஹபீஸ்)
'திவிநெகும’ சட்டமூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமென்பதாலேயே கூட்டமைப்பு திவிநெகும சட்டத்தை எதிர்க்கின்றது. என நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல்துறை பிரதியமைச்சர் ரோஹித அபேகுணவர்தன விளக்கமளித்தhர்.
(4.11.2012) வாழ்வின் எழுச்சி (திவிநெகும) சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் நாடாளுமன்றத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படவுள்ள நிலையில், அச்சட்டமூலத்தைக் கண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் அஞ்சுகின்றதென்பது தொடர்பில்
திவிநெகும சட்டமூலம் மற்றும் தேர்தல் முறை மாற்றம் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் கூட்டத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல்துறை பிரதியமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
திவிநெகும சட்டமூலம் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றப் உதவும். இதனால் நாட்டின் பொருளாதாரம் உறுதியடையும். திவிநெகுமவூடாக வட, கிழக்கிலும் கிராமிய பொருளாதாரம் வளர்ச்சியடையும். இதனால் வட பதி தமிழ் மக்களும் போதிய வருமானம் பெற்று நன்மையடைவர். இவ்வாறு மக்கள் வருமானம் பெறும்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்செயற்பாடுகள் மக்களுக்கு அவசியமற்றதாகிவிடும் என்ற அச்சம் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது. இதனாலேயே திவிநெகும சட்டமூலத்தை கூட்டமைப்பு எதிர்க்கின்றது' என்றார்.
Post a Comment