அரசாங்கம் வடக்கு முஸ்லிம்களின் ஆதரவைபெற முனைப்பு - கபீர் ஹாசீம்
வடக்கில் முஸ்லிம்களின் ஆதரவினை திரட்டும் முனைப்பில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுனர்மன்ற உறுப்பி கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டால் பாரிய தோல்வியை எதிர்நோக்க நேரிடும் என்பதனை அரசாங்கம் புரிந்து கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் வடக்கைச் சேர்ந்த சில முஸ்லிம் மதத் தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புக்களுடன் அரசாங்கம் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தேர்தலை வெற்றியீட்டும் நோக்கிலேயே அரசாங்கம் இவ்வாறு செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் மக்களின் ஆதரவுடன் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதே அரசாங்கத்தின் இந்த புதிய முயற்சியின் உள்நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்துடன் கூட்டணி வைத்துக் கொண்ட முஸ்லிம் கட்சிகள் தனது அடையாளத்தை இழந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் மக்களின் நலனுக்காக ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ச்சியாக கடமையாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார். முஸ்லிம் மதவழிபாட்டுத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும், இம்முறை ஹஜ் பெருநாள் விடுமுறையில் குளறுபடிகள் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். gtn
Post a Comment