மட்டக்களப்பில் திவிநெகும சமுர்த்தி எழுச்சி உற்பத்தி, விற்பனை கண்காட்சி (படங்கள்)
(அபூஆஷியா)
மட்டக்களப்பு மாவட்டத்தில் திவிநெகும சமுர்த்தி வாழ்வாதார திட்டம் மூலம் தங்கள் உற்பத்திகளை மேற்கொண்டுவரும் சமுர்த்தி பயனாளிகளின் உற்பத்திகளை விற்பனைப்படுத்தும் கண்காட்சி மட்டக்களப்பு நாவற்குடா விவேகானந்தா விளையாட்டு மைதானத்தில் இன்று வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவ்வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் உதவி அரசாங்க அதிபர் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
இலங்கை சமுர்த்தி அதிகாரசபையின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அலுவலகம் நடாத்தும் இவ்விற்பனைக் கண்காட்சியில் சமுர்த்தி உற்பத்தியாளர்களின் திவிநெகும உற்பத்திகள், விவசாய உற்பத்திகள், கைத்தொழில் உற்பத்திகள், கால்நடை வளர்ப்பு உற்பத்திகள், மீன்பிடி உற்பத்திகள் என்பனவும் இடம்பெற்றன.
இக்கண்காட்சி இன்று செவ்வாய்க்கிழமை காலை 09:00 மணிக்கு ஆரம்பமாகி புதன்கிழமை மாலை 06:00 மணியுடன் நிறைவடையவுள்ளது. தினமும் காலை 9.00மணி தொடக்கம் மாலை 6.00மணிவரை இக்கண்காட்சியினை இலவசமாக கண்டுகளிக்க முடியும் என இலங்கை சமுர்த்தி அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அலுவலகம் தெரிவித்துள்ளது.
Post a Comment