கருமலையூற்று பள்ளிவாசல் குறித்து கிழக்கு மாகாணசபை தீர்மானம்
(அஸ்ஸிஹாபி)
கருமலையூற்று கிராமத்தில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் புகழ்பெற்ற 'மஸ்ஜிதுல் றாபியா' பள்ளிவாசலை மக்களிடம் கையளிப்பதற்கும் காணிப்பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கும் அம்மக்களது வாழ்வாதாரமாக விளங்கும் மீன்பிடித் தொழிலில் இருக்கும் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கு கிழக்கு மாகாண சபை இன்று தீர்மானித்துள்ளது.
கிழக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வில் முன்னாள் அமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமான அமீர் அலியினால் கருமலையூற்று மக்களது பிரச்சினைகள் சம்பந்தமாக முன்வைக்கப்பட்ட தனிநபர் பிரேரணை சம்மத்தமாகவே மாகாண சபை இவ்வாறு ஏகமனதாகத் தீhமானித்துள்ளது.
Post a Comment