Header Ads



அமெரிக்காவின் உளவுத்துறை தலைவர் ராஜினாமா



திருமணத்திற்கு முன் உடலுறவு குறித்த விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த அமெரிக்க உளவுத்துறை தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமாவை அதிபர் ஒபாமா ஏற்றுக்கொண்டார். இருப்பினும் இவரது ராஜினாமா அமெரிக்க உளவுத்துறை வட்டாரத்தில் பல்வேறு சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.யின் தலைவராக இருந்த லியோன்பெனட்டா ராஜினாமா செய்து அவர் ராணுவ அமைச்சரானார். காலியாக சி.ஐ.ஏ. தலைவர் பதவிக்கு ‌டேவிட் பிட்ராயூஸை ‌கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தலைவராக நியமித்து அழகு பார்த்தார் அதிபர் ஒபாமா.இந்நிலையில் ‌இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து அதற்கான கடிதத்தினை ஒபாமாவிற்கு அனுப்பி வைத்தார்.

அமெரிக்க சி.ஐ.ஏ.யின் ‌தலைவராக பிட்ராயூஸ் (59), அமெரிக்க ராணுவத்திலும், ஆப்கானிஸ்தானில் நேட்டோப்படை இயக்குனர் ஜெனரலாகவும் , ஈராக் பாதுகாப்புப்படை தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புக்களை வகித்து வந்தார். 

இது குறித்து டேவிட்பிட்ராயூஸ் டி.வி.சானல்களுக்கு அளித்த பேட்டியில், எனக்கு திருமணம் ஆன 37 ஆண்டுகளில் இது போன்ற மோசமான கருத்தினை நான் தெரிவித்ததற்காக வருந்து‌கிறேன். எனது மனைவியின் நல்ல கணவனாக, அமெரிக்காவின் ‌கவுரமிக்க உளவு அமைப்பின் தலைவராக இருந்து கொண்டு இது போன்ற கருத்தினை தெரிவித்திருப்பதை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இதற்கு நான் தார்மீக பொறுப்பேற்று எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். இதற்கான கடிதத்தினை தேசிய புலனாய்வு அமைப்பிடமும், அதிபர் ஒபாமாவிடமும் அனுப்பியுள்ளேன் . 

இவரது ராஜினாமாவை அதிபர் ஒபாமா ஏற்றுக்கொண்டதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பு அலுவலகங்கள் தெரிவித்தன.பிட்ராயூஸ் ராஜினாமா செய்ததையடுத்து சி.ஐ.ஏ. அமைப்பின் துணைத்தலைவராக இருந்த மைக்கேல் மொரல் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பிட்ராயூஸ் திடீரென ராஜினாமா செய்திருப்பது அமெரிக்காவின் பல்வேறு புலனாய்வு அமைப்பினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.பிட்ராயூஸ் ராஜினாமா குறித்து அமெரிக்க பத்திரிகைகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. அதில் இவர் பாலியல் புகாரில் சிக்கியிருக்கலாம் எனவும், மிரட்டப்பட்டதால் பதவி விலகியுள்ளதாகவும் கூறுகின்றன. எனினும் பிட்ரயூஸ் ராஜினாமா மர்மமாக உள்ளது. 

No comments

Powered by Blogger.