சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஸக்காத் நிதிய ஏற்பாட்டில் ஸக்காத் விநியோகம் (படங்கள்)
(அபுதீனா)
சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஸக்காத் நிதியம் ஒழுங்கு செய்திருந்த ஸக்காத் (ஏழை வரி) விநியோகம் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் பிரதம நம்பிக்கையாளரும், சாய்ந்தமருது - மாளிகைக்காடு பைத்துஸ் - ஸக்காத் நிதியத்தின் தலைவருமான, ஓய்வுபெற்ற அதிபர் அல் - ஹாஜ். வை.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது ஸக்காத் குழுவினரால் தெரிவுசெய்யப்பட்ட தொழில் முயற்சியாளர்கள், கடனாளிகள், நோயாளிகள், அனாதைப் பிள்ளைகள், புதிதாக இஸ்லாத்தில் இணைந்துகொண்டோர், விதவைகள் போன்றோருக்காக பகிர்ந்தளிக்கப்பட்டன.
இவ்வைபவத்தில் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகவும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல், கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கௌரவ அதிதிகளாகவும் க உட்பட உலமாக்கள், கல்விமான்கள், பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், வர்த்தகப் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இம்முறை எந்த வருடத்திலும் இல்லாதவாறு ரூ. 2,118,733.00 பணமாகவும், நெல்லாக 167 மூடைகளும்கிடைக்கப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment